தேங்காய் உடைத்து இ.கம்யூ போராட்டம்
திருநெல்வேலி:தென்னை விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நடு ரோட்டில் தேங்காய் உடைக்கும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது.
தமிழ் நாட்டில் சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலங்களில் தென்னை சாகுபடி நடைபெறுகிறது. மூன்றரை லட்சம் குடும்பத்தினர் தென்னை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தென்னை சார்ந்த தொழில்கள் மூலம் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டுக்கு வியாபாரம் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
![]() |
தேங்காய் உற்பத்தி அதிகரித்தாலும் விவசாயிகளின் வேதனையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. உழுதவன் கணக்கு பார்த்தால் உலக்கை கூட மிஞ்சாது என்பதைப் போல் இன்று விவசாயிகளின் நிலை உள்ளது.
![]() |
விவசாயிகளின் வாழ்க்கை ஜீவ மரண போராட்டமாக உள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் மேலை நாடுகளிலிருந்து "மாட்டு தீவண புண்ணாக்கு இறக்குமதி" என்ற பெயரில் அந்தந்த நாடுகளில் இருந்து தேங்காய் சக்கையை இங்கு அனுப்பி வைத்து எண்ணெய் பிழிகின்றன.
இதன் மூலம் பெரிய நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்க உடந்தையாக இருப்பதை கண்டித்து தமிழகமெங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேங்காய் உடைப்பு போராட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் தொண்டர்கள், தென்னை விவசாயிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு சாலைகளில் தேங்காய்களைப் போட்டு உடைத்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலும் இப்போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் உடைத்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!














Click it and Unblock the Notifications