கர்நாடகம் அணை கட்டவில்லை - மறுக்கிறார் துரைமுருகன்
கடலூர்: தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு அணை கட்டுவதாக கூறுவது, சும்மா கிடக்கும் சங்கை ஊதிக் கெடுப்பது போல உள்ளது. அப்படி ஒரு அணையை கர்நாடகம் கட்டவில்லை என்று பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பணை கட்ட முயற்சிப்பதாகவும், அதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார்.
![]() |
இதற்கு துரைமுருகன் மறுப்பு தெரிவித்துள்ளார். கடலூரில் நடந்த நீர்ப்பாசனக் கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர் பேசுகையில்,
கர்நாடக மாநிலம் முகளூர் என்ற இடத்தில் தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு தடுப்பணை கட்டிவருவதாக ஜெயலலிதா அறிக்கை விட்டுள்ளார். இதை தமிழக முதல்வர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து நான் விசாரித்தேன். தமிழக எல்லையில் இருந்து 7 கிமீ தொலைவில் உள்ளது முகளூர். இங்கு ஆற்றில் உள்ள தரைப்பாலம் மூழ்கியுள்ளது. அந்த இடத்தில் பாலம் கட்டலாமா என்பது தொடர்பாக கர்நாடகா அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஆனால் ஜெயலலிதா என்ன நடக்கிறது என்றுகூட தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டு வாய்க்கு வந்தபடி அறிக்கை விடுவது அர்த்தமற்றது. ஜெயலலிதா செய்யும் வேலைகள் எல்லாம், "சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி" என்ற கதையாக, தவறான தகவல்களை கொடுத்து அரசுக்கு எதிராக தமிழக மக்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது போல உள்ளது என்றார் துரைமுருகன்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!













Click it and Unblock the Notifications