13 கற்பழிப்பு- 7 கொலை- 22 திருட்டு:விழுப்புரம் வாலிபருக்கு தூக்கு தண்டனை!
விருத்தாச்சலம்:கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் வயல்களில் வேலை செய்து வந்த பெண்களை கற்பழித்துக் கொலை செய்து, நகைகளைத் திருடிய நபருக்கு விருத்தாச்சலம் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் வயல்களில் தனியாக வேலை பார்த்து வந்த பெண்கள் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டு வந்தனர். மேலும் அவர்கள் அணிந்திருந்த நகைகளும் திருடப்பட்டிருந்தன.
இந்த கற்பழிப்பு, திருட்டு, கொலைக் குற்றங்களில் ஒரே நபரே ஈடுபடுவதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அந்த நபரைப் பிடிக்க வலை வீசப்பட்டது.
![]() |
இந் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் கள்ளக்குறிச்சி அருகே கீழ்தேரிகலா என்ற இடத்தில் ஒரு வாலிபர் கிராம மக்களிடம் பிடிபட்டார். அங்குள்ள வயல் ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த மூக்குத்தியை எடுப்பதற்காக வந்தபோது அந்த நபர் சிக்கினார்.
அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடமிருந்து அந்த மூக்குத்தியை அவன் திருடியது தெரிய வந்தது.
ரமேஷிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல காலமாக நடந்து வரும் கற்பழிப்பு, கொலை, திருட்டில் ரமேஷுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
மொத்தம் 7 பெண்களைக் கொலை செய்துள்ளான் ரமேஷ். 13 பெண்களைக் கற்பழித்துள்ளான். 22 பெண்களிடம் நகைகளைத் திருடியுள்ளான். இத்தனை வழக்குகளும் விழுப்புரம், கடலூர் மாவட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து ரமேஷ் மீது விருத்தாச்சலம் விரைவு நீதிமன்றத்தில் 9 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.
தீர்ப்பளித்து நீதிபதி புகழேந்தி கூறுகையில், நெய்வாசல் திருவாச்சியம்மாள் மற்றும் மாளிகை கோட்டம் சிவக்கொழுந்து ஆகிய இரு பெண்களையும் கற்பழித்துக் கொலை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த இரு வழக்குகளிலும் ரமேஷுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது.
முருகன் குடியைச் சேர்ந்த விஜயராணி என்ற பெண்ணை வழிமறித்து காயம் ஏற்படுத்தி நகைகளைக் கொள்ளையடித்த வழக்கிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ரமேஷுக்கு 17 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது என்று நீதிபதி அறிவித்தார்.
விருத்தாச்சலம் நீதிமன்றத்தில் அளிக்கப்படும் முதல் மரண தண்டனை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications