ராமநாதபுரம்-திமுக பெண் கவுன்சிலரை குண்டு வீசிகொல்ல முயற்சி: 2 வாலிபர்கள் கைது-பதற்றம்
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் திமுக பெண் கவுன்சிலர் மீது வெடிகுண்டு வீச முயற்சி நடந்தது. இதையடுத்து அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் தான் சிவகங்கையில் காரில் குண்டு வைத்து நகராட்சித் தலைவர் கொல்லப்பட்டார். இந் நிலையில் இச் சம்பவம் நடந்துள்ளது.
ராமநாதபுரம் 7வது வார்டு திமுக பெண் கவுன்சிலராக இருப்பவர் செல்வி. இவரும் அவரது கணவரும், சிலரும் வீட்டின் முன்பு நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் வெடிகுண்டை செல்வி மீது வீச முயன்றுள்ளனர்.
இதைக்கண்ட அப் பகுதியினர் வாலிபர்களை விரட்டிச் சென்று பிடித்து அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கது பெயர் சிவக்குமார், கோட்டை என்று தெரிய வந்தது.
சமீபத்தில் ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தார் செல்வி. அந்தப் பிரச்சனையில் தான் செல்வியைக் கொல்ல வெடிகுண்டு வீச திட்டமிடப்பட்டதாக போலிசார் சந்தேகிக்கின்றனர்.
இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. போலிஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளாட்சிகளில் காண்ட்ராக்ட், கமிஷன் அடிப்பதில் சகல கட்சியினருக்கும் இடையே ஏற்படும் மோதல் (பல சமயங்களில் உள் கட்சியிலேயே மோதல்) கொலை வரை போகிறது. இந்த மோதலுக்கு முழுக்க முழுக்க பணத்தை பங்கிடுவதில் ஏற்படும் சண்டையே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications