சேலம்-நடுரோட்டில் அரவாணிகள் நிர்வாண சண்டை!
சேலம்:மிஸ் கூவாகம் பட்டம் வென்ற ரசிகா உள்ளிட்ட அரவாணிகள், சேலம் பஸ் நிலையப் பகுதியில் கட்டிப்புரண்டு நிர்வாண கோலத்தில் சண்டை போட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் நகரில் வர வர அரவாணிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. பஸ் நிலையப் பகுதியில் இரவில் யாரும் நடமாடக் கூட முடியவில்லை. கூட்டம் கூட்டமாக வலம் வரும் அரவாணிகள், ஆண்களை முற்றுகையிட்டு விபச்சாரத்திற்குக் கூப்பிடுவதும், வராதவர்களை கும்பலாக சேர்ந்து அடித்து உதைத்துப் பணம், கடிகாரம், நகைகளைப் பிடுங்கிக் கொண்டு விரட்டுவதும் அதிகரித்து வருகிறது.
![]() |
சமீபத்தில் கூட சில அரவாணிகள் பெண் போலீஸ் ஒருவரை ஓட ஓட விரட்டி அடித்து நொறுக்கிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டபோது அங்கும் அவர்கள் பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.
இந் நிலையில் நடு ரோட்டில் கட்டிப்புரண்டு நிர்வாண கோலத்தில் அரவாணிகள் பெரும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் நவ்யா, மைதிலி, பிரியா ஆகிய 3 அரவாணிகள் வசித்து வருகின்றனர். நேற்று மதியம், இந்த மூன்று அரவாணிகளைத் தேடி வேறு பகுதியைச் சேர்ந்த 6 அரவாணிகள் வந்தனர்.
9 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது சண்டையாக மாறியது. ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.
அப்போது அடி தாங்க முடியாமல் பிரியா, மைதிலி, நவ்யா ஆகியோர் ரோட்டுக்கு ஓடி வந்தனர்.
ரவுண்டானா பகுதியில் அவர்கள் மூன்று பேரும் ஓடினர். ஆனால் மற்ற 6 அரவாணிகளும் அவர்களைத் துரத்தி வந்து பிடித்து கடுமையாக தாக்கினர்.
![]() |
ஒரு அரவாணியின் சேலையையும் கழற்றி எறிந்து அவரை நிர்வாணப்படுத்தினர்.
இதைப் பார்த்து அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். பெண்கள் அலறி அடித்து ஓடினர். ஆண்களுக்கோ, எப்படி போய் விலக்கி விடுவது என்ற பயம்.
இந்த சமயம் ஒருவர் பாவாடையை எடுத்துக் கொண்டு வந்து நிர்வாணமான அரவாணியிடம் கொடுத்து அவரது மானத்தைக் காப்பாற்ற உதவினார். அரவாணிகளின் இந்த அராஜக ரகளையால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர். அத்தனை அரவாணிகளையும் ஜீப்பில் போட்டுக் கொண்டு காவல் நிலையம் சென்றனர்.
காவல் நிலையத்தில் பிரியா, மைதிலி, நவ்யா ஆகியோர் அழுதுகொண்டே போலீஸாரிடம் கூறுகையில்,
நாங்கள் அமைதியான முறையில் வாழ்ந்து வருகிறோம். ஆனால் எங்களை விபச்சாரத்தில் ஈடுபடுமாறு, அந்த ஆறு பேரும் வற்புறுத்தினர். அதனால்தான் இந்த சண்டை நடந்தது என்றனர்.
ஆனால் மற்ற 6 பேரும் இதை மறுத்துள்ளனர். பஸ் நிலையத்தில் பொதுமக்களிடையே அரவாணிகளுக்கு கெட்ட பெயர் வரும்படி நடந்து கொள்ளாதீர்கள் என்றுதான் அவர்களுக்கு அறிவுரை கூறினோம். நாங்கள் அவர்களை அடிக்கவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.
3 பேரையும் தாக்கியதாக கூறப்படும் ரசிகா, மோனிஷா, பூஜா, சுவாதி, பிரியா, ராதிகா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான மிஸ். ரசிகா சமீபத்தில் கூவாகத்தில் நடந்த மிஸ் கூவாகம் போட்டியில் அழகு ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்














Click it and Unblock the Notifications