மனைவி கொடுமை?: மகளிர் ஆணையத்தில்இனி ஆண்களும் புகார் செய்யலாம்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்:மனைவியால் பாதிக்கப்பட்ட ஆண்களும், மகளிர் ஆணையத்தில் இனி புகார் செய்யலாம் என மகளிர் ஆணையத் தலைவி ராமாத்தம்மாள் கூறியுள்ளார்.

நாகர்கோவிலில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது,

கடந்த 1993ம் ஆண்டு மகளிர் ஆணையம் துவங்கப்பட்டது. குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாப்பதற்கான சட்டத்தின் கீழ் பல கொடுமைகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

முக்கியமாக குடும்ப பெண்கள் தான் உடல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் கடும் கொடுமைக்கு ஆளாகிறார்கள்.

அதற்காக இச்சட்டம் ஆண்களுக்கு எதிரானது அல்ல.

கணவன் தனது மனைவியை கடுமையான வார்த்தைகளால் பேசி புண்படுத்துவதைகூட இச்சட்டத்தின் மூலம் தீர்வு காணலாம்.

குடும்பத்தில் இருக்கும் பெண்கள், தவறான வழியில் செல்வதை தடுத்து கவுன்சிலிங் மூலம் நல்வழிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கிறோம்.

மனைவியின் டார்ச்சர் தாங்காத ஆண்களும் எங்களிடம் வந்து புகார் செய்யலாம். எஙகளிடம் புகார் கொடுத்த 2 ஆண்களுக்கு நியாயம் கிடைக்க செய்துள்ளோம்.

மனைவி வீட்டாரின் கொடுமையால் பாதிக்கப்பட்ட அந்த ஆண்களுக்கு, அவர்களின் மனைவி வீட்டாரிடமிருந்து பிடுங்கப்பட்ட பணத்தை மீட்டு கொடுத்துள்ளோம் என்றார் ராமாத்தம்மாள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+