புதுக்கோட்டையில் கண்ணகிக்கு கோவில்
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:கற்புக்கரசி கண்ணகிக்கு புதுக்கோட்டையில் கோவில் கட்ட சிலப்பதிகார ஆன்மீக பேரவை முடிவு செய்துள்ளது.
பேரவையின் கூட்டம் புதுக்கோகாட்டையில் நடந்தது. மாநில அமைப்பாளர் செளமியா நாராயணன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில், தமிழக, கேரள எல்லையில் இருப்பது போன்ற ஒரு கண்ணகி கோவிலை புதுக்கோட்டையில் கட்டுவது என தீர்மானிக்கப்பட்டது.
மேலும், சிலப்பதிகார சொற்பொழிவுகளை தமிழகம் முழுவதும் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
பல்வேறு தமிழ் அமைப்புகளின் உதவியுடன் இந்தக் கோவில் கட்டப்படவுள்ளது. விரைவில் இப்பணி தொடங்கும்.












Click it and Unblock the Notifications