சோனியா வருகை-ராமேசுவரம் கடல் பகுதியில்3 போர் கப்பல்கள் கண்காணிப்பு
ராமநாதபுரம்:அகல ரயில் பாதையை துவக்கி வைக்க வரும் ஆகஸ்ட் 12ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருவதையொட்டி ராமேஸ்வரம் கடல் பகுதியில் 3 போர் கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மானாமதுரை-ராமேசுவரம் இடையிலான அகல ரயில் பாதையை துவக்கி வைக்க சோனியா ராமேசுவரம் வருகிறார்.
பாம்பன் கடல் பகுதியின் மீது இருந்த மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்ச்சியில் பங்கேற்க சோனியாவுடன், ரயில்வே அமைச்சர் லாலு, தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் முக்கிய தலைவர்கள் வரவுள்ளனர்.
இதையடுத்து ராமேசுவரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முக்கியமாக அகதிகள் முகாம்களில் போலீசார் குவிக்கப்பட்டு, அகதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கப்படுகிறது.
மேலும் சிறிய ரோந்து படகுகளிலும் கடற்படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாக்ஜலசந்தி மற்றும் பாக் வளைகுடா பகுதியில் கடற்படையின் 3 போர்க் கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன.
கடலிலும், தரையிலும் செல்லக்கூடிய ஹோவர்கிராப்ட் படகும் ரோந்து பணியில் இறங்கியுள்ளது.
இதுகுறித்து தெற்குப் பகுதி கடற்படை ரியா கமாண்டர் பர்மன் கூறுகையில்,
கடலோர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து வீரர்களும் 24 மணி நேரமும் விழிப்போடு இருக்கும்படி உஷார் படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
ராமேஸ்வரம் தவிர தொண்டி, ஜெகதாபட்டினம், நாகப்பட்டினம், கோடியக்கரை, தோப்புத்துறை ஆகிய கடல் பகுதிகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications