மெக்காவில் 135 தீவிரவாத ஆதரவாளர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

ரியாத்:இஸ்லாமியர்களின் புனித நகரான மெக்காவில் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் 135 பேரை சவூதி அரேபிய போலீஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 135 பேரும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்புகள் உள்ளதா என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக கடந்த 2003ம் ஆண்டு முதல் சவூதி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் 172 பேர் இதுபோல கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் 135 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் நான்கு பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகளை சவூதியில் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

தண்ணீரை வீணடித்தால்: ஷார்ஜா

இந் நிலையில் ஷார்ஜா குடிமக்கள் தண்ணீரை வீணடிக்காமல் சிக்கனமாக செலவழிக்குமாறு ஷார்ஜா மின்சாரம் மற்றும் குடிநீர் ஆணையம் (சேவா) கேட்டுக் கொண்டுள்ளது. தண்ணீரை வீணடிப்போர் தண்டிக்கப்படுவர் எனவும் அது எச்சரித்துள்ளது.

இதுகுறித்து சேவா விடுத்துள்ள அறிவிப்பில், தண்ணீரை சிக்கணமாக மக்கள் பயன்படுத்த வேண்டும். தண்ணீரின் பயன்பாட்டு முறையை மாற்றியமைத்து சிக்கணமாக உபயோகப்படுத்த முயல வேண்டும்.

தண்ணீரை வீணடிப்போர் தண்டிக்கப்படுவர். அப்படிப்பட்டவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சேவா அதிகாரிகள், வீடுகள், வணிக வளாகங்கள், தொழில் வளாகங்களுக்கு வருகை தந்து ஆய்வு மேற்கொள்வர்.

தண்ணீரை வீணடிப்போர் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து தவறு செய்வோருக்கு சட்டப்படியான தண்டனை தரப்படும் என்று எச்சரித்துள்ளது.

இருளில் மூழ்கிய அல் புதீனா:

இதற்கிடையே ஷார்ஜாவின் அல் புதீனா என்ற பகுதியில் மின் வெட்டு காரணமாக அப்பகுதி இருளில் மூழ்கியது. அப்பகுதியில் வசிக்கும் 12க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குளிர்சாதன வசதியைப் பயன்படுத்த முடியாமல் இரவு நேரத்தை அவஸ்தையுடன் கழிக்க நேர்ந்தது.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1,.45 மணிக்கு மின்சாரம் போனது. அதிகாலை 5 மணிக்குத்தான் மின்சாரம் திரும்ப வந்தது. இதன் காரணமாக இந்தப் பகுதியில் உள்ள அபார்ட்மென்ட்டில் வசிப்போர் பெரும் அவஸ்தைக்குள்ளானார்கள்.

அல் புதீனா, ரோல்லா, அல் முஸ்ஸலா, அபு ஷகாரா ஆகிய பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது வழக்கமாகி விட்டது. மின்சார உபயோகம் அதிகரித்திருப்பதால் இந்த நிலை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+