போலிகளை தவிர்க்க காஞ்சி பட்டுசேலைகளுக்கு ஸ்பெஷல் முத்திரை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்து பட்டுச் சேலைகளுக்கு முத்திரை பதிக்கும் முறையை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
உலக அளவில் காஞ்சிபுரம் பட்டு சேலைகளுக்கு பெரும் கிராக்கி உள்ளது. ஆனால் காஞ்சிபுரம் பட்டு என்று சொல்லி ஏகப்பட்ட போலியான சேலைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
![]() |
இதனால் காஞ்சிபுரத்து பட்டுக்கு மக்கள் மத்தியில் இருந்த பெயர் கெட்டு வருகிறது.
இதையடுத்து சேலைகளுக்கு முத்திரை பதிக்கும் முறையை கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தனி முத்திரை:
இது குறித்து கைத்தறி மற்றும் ஜவுளித்துறை ஆணையர் மோகன் கூறியதாவது,
காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்படும் பட்டு சேலைகளுக்கு சிறப்பு முத்திரை பதிப்பதற்காக, காஞ்சியில் உள்ள 100 கைத்தறி நெசவாளர்களுக்கு முத்திரை வழங்கப்படுகிறது.
அவர்கள் தயாரிக்கும் பட்டுச் சேலைகளில் அரசின் முத்திரை இருக்கும்.
முத்திரை பதிப்பது அடுத்த வாரம் முதல் அமலுக்கு வரும்.
இதேபோல் மதுரை சுங்கடி சேலைகளுக்கும் முத்திரை பதிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என்றார்.













Click it and Unblock the Notifications