14ம் தேதி சிவகங்கை நகராட்சி தலைவர் தேர்தல்:திமுகவில் கடும் கோஷ்டி பூசல்
சிவகங்கை:சிவகங்கை நகராட்சித் தலைவர் காரில் குண்டு வைத்து கொலை செய்யப்பட்டதையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்ய வரும் 14ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்ெகாள்ளப்பட்டுள்ளன.
சிவகங்கை நகராட்சித் தலைவராக இருந்தவர் முருகன் இருந்தார். முன்பு திமுகவில் இருந்தவர் பின்னர் சுயேச்சையாக தலைவர் பதவியைப் பிடித்தார்.
இவர் தலைவராவதை திமுகவில் ஒரு கோஷ்டி விரும்பவில்லை. இதனால் தான் சுயேச்சையாக நின்று வென்றார்.
இந்த கோஷ்டிப் பூசல் மற்றும் சிவகங்கையில் இவர் நடத்தி வந்த கேபிள் டிவி தொழில் போட்டியில் ஜூலை 29ம் தேதி காரில் குண்டு வைத்துக் ெகால்லப்பட்டார் முருகன்.
இந் நிலையில் காலியாக உள்ள நகராட்சித் தலைவர் பதவிக்குப் புதியவரைத் தேர்ந்தெடுக்க வருகிற 14ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
முதலில் முருகனின் மனைவியை தலைவராக்க முயற்சிகள் நடந்தன. ஆனால் அதை அவர் ஏற்கவில்லை.
இந்த நிலையில் அடுத்த தலைவர் யார் என்பதில் திமுக கோஷ்டிகளுக்கிடையே பெரும் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.
இரு கோஷ்டியினரும் பணத்தை இறைத்து கவுன்சிலர்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடைசி நேரத்தில் கவுன்சிலர்கள் கடத்தப்படக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
நகராட்சித் தலைவர் தேர்தல் காரணமாக சிவகங்கையில் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications