ஹைதராபாத்-தஸ்லீமா மீது எம்எல்ஏக்கள் தாக்குதல்
ஹைதராபாத்:வங்கதேச எழுத்தாளரும் தனது எழுத்துக்களால் சில இஸ்லாமிய அமைப்புகளின் கடும் கண்டனத்துக்கு ஆளானவருமான தஸ்லீமா நஸ் ரீன் தாக்கப்பட்டார்.
ஹைதராபாத் பிரஸ் கிளப்பில் இந்தத் தாக்குதல் நடந்தது. அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திகாதுல் முஸ்லிமீன் என்ற கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் வந்து தஸ்லிமாவைத் தாக்கினர்.
![]() |
பத்திரிக்கையாளர்களை தஸ்லீமா சந்திக்க இருந்த நிலையில் 3 எம்எல்ஏக்கள் தலைமையில் அவரை எதிர்த்து கோஷமிட்டபடி வந்த அவர்கள் தாக்கினர். பூச்செண்டு, பூத் தொட்டி என கையில் கிடைத்தை எடுத்து அவர் மீது வீசினர். இதில் அவர் காயமடைந்தார்.
இந் நிலையில் அந்த 3 எம்எல்ஏக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்லாம் குறித்தும், பெண்ணுரிமை குறித்தும், செக்ஸ் குறித்தும் பல சர்ச்சைக்குரிய புத்தகங்களை எழுதியுள்ளவர் தஸ்லீமா.
அவருக்கு எதிராக வங்கதேசத்தில் பத்வா பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் இந்தியாவில் குடியேறி வசித்து வருகிறார்.













Click it and Unblock the Notifications