கருணாநிதிக்கு மிரட்டல் மெயில் அனுப்பியவர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழக முதல்வர் கருணாநிதியை குடும்பத்தோடு கொன்று விடுவதாக இ-மெயில் அனுப்பிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சியை சேர்ந்தவர் சுரேஷ் (23). இவர் நேற்று காலை சென்னை அரசு கருவூலத்துக்கு ஒரு இ-மெயில் அனுப்பினார். அதில் கடந்த 2001ல் அண்ணா பல்கலைகழகம் திருத்தியமைத்த பாடத் திட்டத்தின்படி நிறைய மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. அதனால் அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக முதல்வர் அறிவிப்பு செய்யவேண்டும்.

இல்லாவிட்டால் முதல்வரை குடும்பத்துடன் கொன்று விடுவேன் என மிரட்டியிருந்தார்.

இதையடுத்து மெயில் எங்கிருந்து வந்தது என்பது குறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் மெயில் திருச்சியில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து எந்த இன்டர்நெட் மையத்திலிருந்து மெயில் அனுப்பப்பட்டது என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இன்டர்நெட் மையத்தை அணுகி ேபாலீஸார் விசாரித்தபோது, சுரேஷ் சிக்கினார்.

திருச்சியை சேர்ந்த சுரேஷ் தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த 2001-2005 வரை பி.இ. படித்துள்ளார். படிப்பை முடிக்காமல், 3 பாடங்களில் அரியர்ஸ் வைத்துள்ளார்.

இந்த மிரட்டல் மூலம் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டால் தனக்கு பி.இ பட்டம் கிடைத்துவிடும் என முட்டாள்தனமாக நினைத்து இந்த இ-மெயிலை அனுப்பினாராம்.

சுரேஷை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+