பெண் குரலில் விபச்சாரத்துக்கு அழைத்துகொள்ளை-பலே பலே மாணவர் கைது!

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:பெண் குரலில் போனில் பேசி, ஜாலியா இருக்கலாம் வாங்க என்று கூறி ஆண்களை அழைத்து நகை, பணத்தைப் பறித்து வந்த கல்லூரி மாணவரை போலீஸார் கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அடுத்த பனையக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சித்திரவேல். இவரது மகன் சுரேஷ். இவர் கரந்தையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகின்றார்.

இவரும் நண்பர்கள் சிலரும் விபச்சாரப் பெண்களுடன் தொடர்பு உள்ளவர்கள். அந்தப் பெண்களுடன் உல்லாசமாக இருக்க வரும் வாடிக்கையாளர்களின் போன் நம்பர்களை வாங்கி வைத்துக் கொண்டு பெண் குரலில் பேசி, வரவழைத்து பணம், நகையை பறித்து வந்துள்ளனர்.

இதுதவிர வேறு சில மோசடிகளிலும் கூட சுரேஷ் ஈடுபட்டுள்ளார். அதாவது, சுரேஷின் செல் போனை தொடர்பு கொண்டு பெண் தேவை என்று கேட்பவர்களிடம், சுரேஷே பெண் குரலில் பேசுவாராம்.

குறிப்பிட்ட இடத்திற்கு வாருங்கள், ஜாலியாக இருக்கலாம் என்று சுரேஷ் அழைப்பாராம். அதை நம்பி ஆவலுடன் வருவோரை சுரேசும் அவனது நண்பர்களும் சேர்ந்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம், நகைகளைப் பறித்து வந்துள்ளனர்.

இப்படி எதையோ தேடிப் போய், நகை, பணத்தை இழந்த நாகராஜன் என்பவர் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி சுரேஷை வளைத்தனர்.

இந்தக் கொள்ளையில் விபச்சாரப் பெண்களுக்கும் தொடர்புள்ளதா என விசாரிக்கப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+