ராகிங்: மாணவர்களை தாக்கிய அதிமுக புள்ளி!
சங்கரன்கோவில்:ராகிங் செய்த மாணவருக்கு ஆதரவாக கல்லூரி விடுதிக்குள் நள்ளிரவில் நுழைந்து மாணவ, மாணவிகள் மீது தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கரன்கோவில் அருகே மலையடிக்குறிச்சி என்ற பகுதியில் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி உள்ளது.
இக்கல்லூரியில் கடந்த மாதம் முதலாம் ஆண்டு மாணவர்களை சில சீனியர் மாணவர்கள் ராகிங் செய்துள்ளனர். கல்லூரியின் முதல்வர் ராமையா தலையீட்டு மாணவர்களை கண்டித்து எச்சரித்துள்ளார்.
இந் நிலையில் செல்லக்குமார் என்ற மாணவர், முத்துக்குமார் என்ற மாணவரை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து முதல்வரும் நிர்வாகியுமான ராமைய்யாவிடம் முத்துக்குமார் புகார் செய்தார். அவரும் செல்லக்குமாரை அழைத்து கண்டித்துள்ளார்.
இந்தப் பகுதியின் அதிமுக பிரமுகரான செந்தூர் பாண்டியன் ராகிங் செய்த செல்லக்குமாருக்கு ஆதரவாக கல்லூரி முதல்வரிடம் சண்டை போட்டு வாக்குவாதம் செய்தார்.
இந் நிலையில் நேற்று நள்ளிரவு இந்தக் கல்லூரிக்குள் 11 பேர் கொண்ட கும்பல் நுழைந்து மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கியது. இதையடுத்து மாணவ, மாணவிகள் அலறியடித்து ஓடினர்.
இது குறித்து ராமைய்யா புளியங்குடி போலீஸில் புகார் செய்தார்.
போலீஸார் அதிமுக புள்ளியான செந்தூர் பாண்டியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இத் தாக்குதலில் ஈடுபட்ட செல்லப்பாண்டி, சாமித்துரை, சுரேஷ்குமார், முத்துபாண்டியன், சரவணக்குமார், சுரேஷ், தலச்செல்வம், அமிர்த பாண்டி, நாகதுரை, பூதப்பாண்டி உள்பட 11 பேரை தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications