இந்தியாவுக்கு யுரேனியம்: ஆஸ்திரேலிய எதிர்க் கட்சி எதிர்ப்பு
மெல்போர்ன்:இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க ஆஸ்திரேலிய எதிர்க் கட்சியான தொழிலாளர் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இந்திய அணு உலைகளுக்குத் தேவையான யுரேனியத்தை வழங்கினால் அது பாகிஸ்தானுக்கு எரிச்சலை உண்டாக்கும். எனவே தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் மேற்கத்திய நாடுகளுக்கு பாகிஸ்தான் சரியான ஒத்துழைப்பைத் தராமல் போகலாம் என அந்தக் கட்சி கூறியுள்ளது.
இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை அதிகரிக்கும், மேலும் அணு ஆயுத பரவல் ஒப்பந்தத்தில் இந்தியா இன்னும் கையெழுத்திடாமல் இருந்து வருகிறது. இதனால் யுரேனியத்தைத் தரக் கூடாது என அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராபர்ட் மெக்கெல்லாண்ட் கூறியுள்ளார்.
இந்தியா-அமெரிக்கா இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்பட்டதையடுத்து இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க ஆஸ்திரேலியா முன் வந்தது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் யுரேனிய தாது மிக அதிக அளவில் கிடைக்கும் நாடு ஆஸ்திரேலியா ஆகும்.












Click it and Unblock the Notifications