மருமகளிடம் மாமனார் பாலியல் சில்மிஷம்:விபச்சாரத்தில் தள்ள முயற்சி- குடும்பமே கைது
சென்னை:புகுந்த வீட்டிற்கு வந்த மருமகளிடம் சில்மிஷம் செய்த மாமனார் மற்றும் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையை அடுத்துள்ள கொட்டிவாக்கத்தை சேர்ந்தவர் பூபாலகிருஷ்ணன் (62). இவர் சிவகங்கை எஸ்பி அலுவலகத்தில் கிளார்க்காக வேலை பார்த்து ரிடையர்டு ஆனவர்.
இவரது மகன் பார்த்தீபன். இவருக்கு திருமணமாகி கல்பனா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
வெளிநாட்டில் வேலை பார்க்கும் பார்த்தீபன் தன் தந்தையின் பாதுகாப்பில் குடும்பத்தை விட்டுவிட்டு சென்றுவிட்டார்.
இந் நிலையில் மருமகளிடம் தனது சிலமிஷத்தை காட்ட ஆரம்பித்துள்ளார் பூபாலகிருஷ்ணன். இதற்கு அவரது மனைவியும் ஒத்தாசையாக இருந்துள்ளார்.
முதலில் காபி கொடுக்க வரும் கல்பனாவை இடுப்பை பிடித்து கிள்ளி தனது சில்மிஷ வேலைகளை ஆரம்பித்துள்ளார் மாமனார்.
பின்னர் கல்பனா குளிக்க போனால் பாத்ரூம் கதவில் ஓட்டை போட்டு ரசித்துள்ளார்.
நடுராத்திரியில் எழுந்து மருமகள் கல்பனாவின் பக்கத்தில் போய் படுத்து துன்புறுத்தியுள்ளார் பூபாலகிருஷ்ணன்.
இதையெல்லாம் அவ்வப்போது தனது மாமியார் கஸ்தூரி தேவியிடம் கூறியுள்ளார்.
ஆனால், அதை கண்டுகொள்ளாமல் இருந்த கஸ்தூரி, ஒரு கட்டத்தில் நீதான் அனுசரிச்சு போனால் என்ன என்று அதிர்ச்சிகரமான கேள்வியைக் கேட்டுள்ளார்.
விபச்சாரத்தில் தள்ள முயன்ற நாத்தனார்:
கல்பனாவின் நாத்தனாரான பிரபா ஹரி விபச்சாரம் செய்து வந்துள்ளார்.
கல்பனாவையும் விபச்சாரத்தில் தள்ள அவர் முயன்றுள்ளார். பிரபா ஹரிக்கு செக்ஸ் டாக்டர் பிரகாசுடன் தொடர்பு இருந்துள்ளது.
கொலை மிரட்டல்:
இந் நிலையில் கல்பனாவின் கணவர் பார்த்தீபன் வெளிநாட்டில் இருந்து திரும்பியுள்ளார். தன் கணவரிடம் நடந்தது அனைத்தயும் சொல்லி கதறியுள்ளார். பார்த்தீபன் இதுகுறித்து தனது தந்தையிடம் கேட்டதற்கு, அவர் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் பார்த்தீபன் தன் மனைவி, குழந்தைகளுடன் நன்மங்கலம் பகுதிக்கு தனிக்குடித்தனம் சென்றுவிட்டார்.
அதன் பின்பும் போன் மூலம் செக்ஸ் வார்த்தைகளை பேசி கல்பனாவை தொந்தரவு செய்து வந்துள்ளார் பூபாலகிருஷ்ணன்.
இதையடுத்து கல்பனா தனது கணவர் பார்த்தீபனுடன் போலீஸ் கமிஷ்னரை சந்தித்து மாமனார் மற்றும் அவர் குடும்பத்தினர் கொடுக்கும் சித்ரவதைகளை புகாராக கொடுத்தார்.
அந்த புகாரை வைத்து, மடிப்பாக்கம் போலீசார் விசாரித்து, பூபாலகிருஷ்ணன், அவர் மனைவி கஸ்தூரிதேவி, கல்பனாவின் நாத்தனார்களான் பிரபாஹரி, நளினி, நளினியின் கணவர் முருகன் ஆகியோரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
