சேலம் கோட்டத்துக்கு நாடாளுமன்றத்தில்கேரள எம்பிக்கள் கடும் எதிர்ப்பு
டெல்லி:பாலக்காடு கோட்டத்தை பிரித்து சேலத்தில் புதிய ரயில்வே கோட்டம் அமைக்கப்படுவதற்கு கேரளத்தைச் சேர்ந்த எம்பிக்கள் லோக்சபாவில் இன்று கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
பாலக்காடு கோட்டம் என்ற பெயரில் தமிழகத்தின் ரயில்வே பகுதிகளில் பெரும்பாலானவற்றை கேரள அதிகாரிகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு ஆட்டம் போட்டு வருகின்றனர். தமிழக ரயில்களை கேரளா வரை நீட்டிப்பது, தமிழகத்துக்கான ரிசர்வேசன் பெட்டிகளை குறைப்பது, தமிழக திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவது ஆகியவை கேரள அதிகாரிகளின் வேலையாக இருந்து வருகிறது.
இந்த அநீதியை ஒழிக்க சேலத்தில் புதிய மண்டலம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கு கேரளம் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
இந் நிலையில் இன்று லோக்சபாவில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரள எம்பி கிருஷ்ணதாஸ் பேசுகையில்,
புதிய கோட்டத்தை அமைக்கும் முன் இரு மாநில முதல்வர்களுடனும் ஆலோசனை நடத்தப்படும் என லோக்சபாவில் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உறுதிமொழி அளித்திருந்தார். ஆனால், அப்படிப்பட்ட ஆலோசனை எதையும் நடத்தவில்லை.
ஒருதலைப்பட்சமாக சேலத்தில் ரயில்வே மண்டலம் துவக்கப்படுகிறது. இதை எதிர்த்து பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா, ரயில்வே அமைச்சர் லூலு ஆகியோரிடம் கேரள எம்பிக்கள் புகார் கொடுத்தும் பலனில்லை.
கேரளத்தின் எதிர்ப்பு இருக்கும் நிலையில் வரும் செப்டம்பர் 14ம் தேதி முதல் சேலம் கோட்டம் செயல்பட ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாலக்காடு கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான பகுதிகள் சேலத்துக்குப் போய்விடும். (இவை தமிழக பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது) என்றார்.
அவருக்கு ஆதரவாக பிற கேரள எம்பிக்களும் இந்தப் பிரச்சனையை பேச முனைந்தனர். ஆனால், அவர்களைத் தடுத்த சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, முதலில் இந்த பிரச்சனை குறித்துப் பேச நோட்டீஸ் கொடுங்கள். அதற்கு ரயில்வே அமைச்சர் பதிலளிப்பார் என்றார்.
கேரள எம்பிக்கள் அமளி-அவை ஒத்திவைப்பு
முன்னதாக கேரளத்தை தலைமையிடமாகக் கொண்டு தென்-மேற்கு ரயில்வே மண்டலத்தை உருவாக்கக் கோரி லோக்சபாவில் கேரளத்தைச் சேர்ந்த எம்பிக்கள் இன்று அமளியில் இறங்கினர். இதனால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
இன்று அவை கூடியதும் கேரளத்தைச் சேர்ந்த இடதுசாரி எம்பிக்கள் ஒட்டுமொத்தமாய் எழுந்து நின்று, அமைச்சர் லாலு பிரசாத் உறுதியளித்ததைப் போல தனி ரயில்வே மண்டலத்தை உருவாக்க வேண்டும் என்றனர். சிலர் அது தொடர்பான பேனர்களையும் கையில் பிடித்திருந்தனர்.
அப்போது அவைக்குள் வந்த லாலு பிரசாத், இது தொடர்பாக எதையும் பேட மறுத்தார். ஆனால், வெளியுறவு அமைச்சர் பிரனாப் முகர்ஜி எழுந்து இது தொடர்பாக நிச்சயம் விவாதிக்கப்படும். உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும் என்றார்.
ஆனால், தொடர்ந்து கேரள எம்பிக்கள் கூச்சல் போடவே அவையை சபாநாயகர் ஒத்தி வைத்தார்.
எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு
பின்னர் மீண்டும் அவை கூடியதும் பேசிய சபாநாயகர், ந
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications