பாஜக அமளி: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:இந்திய அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தவறான தகவல் கொடுத்ததாகக் கூறி எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் லோக்சபா இன்றும் ஒத்திவைக்கப்பட்டது.

அவை தொடங்கியதும் எழுந்த பாஜக தலைவர் விஜய்குமார் மல்ஹோத்ரா, இது தொடர்பான பிரச்சனையைக் கிளப்பினார். 13ம் தேதி அவையில் அறிக்கைய சமர்பித்த பிரதமர் தவறான தகவல்களை நாட்டுக்குக் கொடுத்துள்ளார் என்றார். அவருக்கு ஆதரவாக பாஜக கூட்டணி, மூன்றாவது அணியினர் குரல் தந்தனர்.

Loksabha

இந்த விவகாரம் குறித்து கேள்வி நேரம் முடிந்த பின் பேசலாம் என்ற சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, இன்று நமது அவைக்கு ஜெர்மனி நாடாளுமன்றத்தின் தலைவர் வந்துள்ளார். நீங்கள் இப்படி கூச்சல் போட்டால் அவர் நம் நாட்டைப் பற்றி என்ன நினைப்பார் என்றார்.

ஆனால், பாஜகவின் கூச்சலும் அமளியும் குறையவில்லை. இதையடுத்து கோபமடைந்த பிரதமர், உங்களை நினைத்தாலே வெட்கமாக உள்ளது. உங்களுக்கெல்லாம் பொறுப்புணர்வே கிடையாதா என்று கேட்டபடி அவையை ஒத்தி வைத்தார்.

ராஜ்யசபாவும் ஒத்திவைப்பு:

அதே போல ராஜ்யசபாவிலும் இதே பிரச்சனை கிளப்பப்பட்டதால் அவையில் அமளி ஏற்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+