6 கோவில்களில் தலித்கள் ஆலய பிரவேசம்
மதுரைஅரசியல் கட்சித் தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டிருந்தால் மக்கள் பிரச்சனையை தீர்த்த்துவிட முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் கூறியுள்ளார்.
மதுரையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின் தொடக்க விழாவில் அவர் பேசியதாவது,
பெரியார் கொள்கைகளை கடைபிடிக்கிறோம் என்று சொல்லும் அரசியல் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோதும், இதுவரை தலித் இன மக்களின் வாழ்க்கைத் தரத்தில் சிறிது கூட முன்னேற்றம் ஏற்படவில்லை.
நில சீர்திருத்தங்கள் தொடர்பாக அமைச்சர் ஐ.பெரியசாமி மேற்கு வங்கத்துக்குச் சென்று ஆய்வு செய்தார். ஆனால் இன்று வரை அதுகுறித்த விவரத்தை வெளியிடவில்லை.
தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக அரசு நிலங்களை வளைத்துப் போட்டுள்ளவர்கள் மீது நில சீர்திருத்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து நிலங்களை கைப்பற்ற வேண்டும்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தமிழ்நாட்டில் 6 கோவில்களில் வரும் செப்டம்பர் மாதம் 30ம் தேதி தலித் இன மக்களுடன் ஆலய பிரவேசம் செல்லப் போகிறோம்.
அரசை மிரட்டும் கட்சிகள் குறித்து முடிவு எடுக்கும் காலம் நெருங்கிவிட்டது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முதலில் கூட்டணி கட்சிகளிடையே கருத்து பரிமாற்றம் அவசியம். அதுவே பயனுள்ளதாக இருக்கும்.
அதையெல்லாம் விட்டு விட்டு, அறிக்கைப் போர் நடத்துவது, ஒருவர் மீது ஒருவர் குற்றங்கள் சுமத்துவது என்பதெல்லாம் தேவையில்லாதது.
இதன்மூலம் எந்தத் தீர்வும் கிடைக்காது என்றார் வரதராஜன்.












Click it and Unblock the Notifications