கிழக்குக் கடற்கரை சாலையில் நிர்வாணஆட்டம்: பெண் என்ஜீனியர்கள் சிக்கினர்
சென்னை: சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள சவுக்கு மரக் காட்டுப் பகுதியில் ஜோடி ஜோடியாக நிர்வாண ஆட்டம் போட்ட பெண்கள் உள்ளிட்டோரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கடற்கரைப் பகுதிகளிலும், அதையொட்டி நீண்டுள்ள சவுக்கு மரக் காடுகளிலும் இளைஞர், இளைஞிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது போலீஸாருக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
பகலிலேயே இங்கு கூத்துக்கள் ஆரம்பமாகி விடுகின்றன. ஜோடி ஜோடியாக பைக்குகள், கார்களில் இங்கு வந்து குவிகிறார்கள். ஒதுக்கப்புறமாக தேடி அமர்ந்து முதலில் கடலை ஆராய்கிறார்கள், பிறகு தங்களைத் தாங்களே ஆராய ஆரம்பித்து விடுகின்றனர்.
பட்டப் பகல், வெட்டவெளி என்பதையெல்லாம் மறந்து, தங்களை மறந்து தாறுமாறாக ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் இளமைச் சிதறல்களை இலவசமாக வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம் கூடுவது வழக்கம்.
இங்கு வரும் காதல் ஜோடிகளில் பெரும்பாலானவர்கள் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர்தான்.
இதுதவிர இரவு நேரங்களில் கம்ப்யூட்டர் நிறுவனங்களில் வேலை பார்க்கும் சிலரும் ஜோடி போட்டு இந்த சவுக்குக் காடுகளைத் தேடி வந்து விடுகின்றனராம்.
உற்சாகமாக வந்து குவியும் இவர்கள், காதலர்களுடன் சேர்ந்து கடலில் குளிப்பதும், உற்சாக பானத்தை உள்ளே தள்ளுவதும், அரை குறை ஆடைகளுடன் விடிய விடிய ஆட்டம் போடுவதுமாக பொழுதைக் கழிக்கின்றனர், போதையில் திளைக்கின்றனர்.
இப்படித் தங்களை மறந்து கிடப்போரைக் குறி வைத்து அப்பகுதியைச் சேர்ந்த ரவுடிகள், சமூக விரோதிகள், இவர்களிடம் இருப்பதைப் பறிப்பது அல்லது அந்தப் பெண்களை மிரட்டிக் கற்பழிப்பது என ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது.
இந்தத் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாடு சிறப்புக் காவல் படையைச் சேர்ந்த போலீஸார் கிழக்குக் கடற்கரைச் சாலை சவுக்கு மரக் காடுகளில் அதிரடி ரெய்டில் இறங்கினர்.
அரை நிர்வாண மற்றும் முழு நிர்வாணத்தில் பெண்கள், ஆண்கள் மணலில் உருண்டு கொண்டிருந்தனர்.
அவர்களை முற்றுகையிட்ட போலீஸார் அத்தனை பேரையும் காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்றனர்.
இதற்கு பெண்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது எங்களது சுதந்திரம். இதை எப்படி நீங்கள் தடுக்கலாம், தலையிடலாம் என அவர்கள் ஆங்கிலத்தில் கோபப்பட, அதைக் கண்டு கொள்ளாத போலீஸார் அனைவரையும் காவல் நிலையத்தில் வைத்து எச்சரித்துள்ளனர்.
பின்னர் அவர்களிடம் இனிமேல் பொது இடங்களில் இதுபோல நடந்து கொள்ள மாட்டோம் என எழுதி வாங்கிக் கொண்டு, மறுபடியும் மாட்டினால் வழக்குதான் என எச்சரிக்கை செய்து அனுப்பி விட்டனர்.
மொத்தம் 31 ஜோடிகள் இவ்வாறு சிக்கி மீண்டுச் ெசன்றுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், இதில் கொடுமை என்னவென்றால் பெரும்பாலான ஆண்கள், அடுத்தவர்களின் மனைவிகளுடன்தான் வருகின்றனர்.
மேலும் சாப்ட்வேர் என்ஜீனியர்களும் இந்தப் பகுதிக்கு வந்து கும்மாளம் போடுகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான்.
வேலை முடிந்ததும், வீடுகளுக்கோ அல்லது ஹாஸ்டலுக்கோச் செல்லாமல் கடற்கரைக்குப் போய் காதலர்களுடன் உற்சாகமாக இருக்கிறார்கள்.
முதலில் பிடிபடுபவர்களை நாங்கள் எச்சரித்து அனுப்பி விடுகிறோம். அடுத்த முறை பிடிபட்டால் வழக்கு போடுவோம் எனவும் எச்சரிக்கிறோம்.
இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் உள்ளூர் ஆட்களாக இருப்பதில்லை என்றனர் போலீஸார்.


Click it and Unblock the Notifications
