உயர்நீதிமன்ற நீதிபதி வீரராகவன் மரணம்:திண்டிவனம் ராமமூர்த்தியின் சகோதரர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வீரராகவன் இன்று காலை உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இவர் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தியின் சகோதரர் ஆவார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் நீதிபதியாக பணியமர்த்தப்பட்டவர் வீரராகவன். அதற்கு முன்பு மத்திய அரசின் மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார்.

இந் நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீரராகவன், இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான திண்டிவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. வீரராகவனின் உடலுக்கு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதிகள், வக்கீல்கள் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த நீதிபதி வீரராகவன், முன்னாள் காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தியின் சகோகதரர் என்பது குறிப்பிடத்தக்ககது.

வீரராகவன் மறைவையொட்டி சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை பெஞ்சுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. வீரராகவனின் உடல் நாளை தகனம் செய்யப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+