வைகுண்டம் வீடுகளில் இன்றும் போலீஸார் சோதனை

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:வி.வி.மினரல் நிறுவனத் தலைவர் வைகுண்டராஜனின் வீடு மற்றும் இருப்பிடங்களில் இன்றும் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கீரைகாரன்தட்டில் வி.வி.மினரல் நிறுவனம் உள்ளது. ஜெயா டிவியின் முக்கியப் பங்குதாரரான வைகுண்டராஜனின் நிறுவனம் இது.

Vaikunda Rajan

கனிம வளத்துறை விதிகளை மீறி செயல்பட்டதாக இந்த வைகுண்டராஜன் மீது வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று கீரைக்காரன்தட்டு கிராமத்தில் உள்ள வி.வி.மினரல் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நெல்லை எஸ்.பி ஸ்ரீதர் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். காலை 10 மணிக்கு தொடங்கிய சோதனை பிற்பகல் 3 மணிவரை நீடித்தது.

Vaikunda Rajan Raid

சோதனையின்போது கணிணி மற்றும் சி.பு.யு, முக்கிய கோப்புகளை போலீசார் கைப்பற்றினர். இது குறித்து எஸ்.பி ஸ்ரீதர் கூறுகையில் வி.வி.மினரல் நிறுவன பங்குதாரர் வைகுண்டராஜன் மீது ஏற்கனவே அணுசக்தி சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது அவரது நிறுவனத்தில் சோதனை நடத்தினோம் என்றார்.

ஊழியர்கள் போராட்டம்:

இந்த நிலையில், வி.வி.மினரல் நிறுவனத்தில் சோதனையை கண்டித்து அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் ஆண்கள், பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் அலுவலக வாளகத்தில் கையில் தட்டுகளை ஏந்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயங்கி விழுந்த பெண் ஊழியர்கள்:

காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் போலீசார் சோதனையை முடித்து விட்டுச் செல்லும் வரை நடந்தது. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சில பெண்கள் மயங்கி விழுந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Vaikunda Rajan Raid

இதேபோல் வி.வி.மினரல் நிறுவனத்திற்கு சொந்தமான வல்லான்விளை மணல் ஆலையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் 500 பேரும் நேற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் சோதனை நடத்தியபோது ஆலை ஊழியர்கள் அலுவலகத்திற்கு வெளியே போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பி கொண்டே இருந்தனர்.

ஊழியர்களின் இடையூரால் போலீசார் சோதனை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது. கம்யூட்டர் மற்றும் கோப்புகளை போலீசார் எடுத்துச் செல்ல முயன்றபோது, அதை ஊழியர்கள் தடுத்தனர்.

Vaikunda Rajan Raid

மேலும் எஸ்.பி.யின் வாகனத்தை முற்றுகையிட்டு மறியல் செய்தனர். ஆனால் அதிகாரிகள் மற்றும் போலீசார் முற்றுகையிட்டவர்களை தடுக்க முயலவில்லை. அப்போது மறியலில் ஈடுபட்ட பெண்களில் சிலர் மயங்கி விழுந்தனர்.

சக ஊழியர்கள் அவர்களை வாகனங்களில் மருத்துவமனக்கு எடுத்து செல்ல முயன்ற போது போலீசாருக்கும் ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

நிலைமை மோசமாவதை அறிந்த எஸ்.பி ஸ்ரீதர் வாகனத்தை விட்டு இறங்கி முற்றுகையில் ஈடுபட்டவர்களை கலைந்து போக சொன்னார். இறுதியாக ஆலையை விட்டு வெளியேறிய அதிரடி படை வாகனத்தின் மீது ஊழியர்கள் கற்களை வீசினர்.

இந்த நிலையில் இன்றும் வைகுண்டராஜன் இருப்பிடங்களில் காவல்துறை சோதனை நடத்தப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+