லாரி ஏற்றி ஏட்டு கொலை-டிரைவர் கைது
வேலூர்:வேலூர் மாவட்டத்தில் நேற்றிரவு வாகனச் சோதனையில் ஈடுபட்ட தலைமைக் காவலர் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். லாரி டிரைவரை போலீசார் விரட்டி பிடித்தனர்.
வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகேயுள்ள வெல்லக்கல்நத்தம் என்ற இடத்தில் வாணியம்பாடியைச் சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால், திருப்பத்தூர் ஏட்டு கருணாகரன் மற்றும் தாலுகா ஏட்டு மாரிமுத்து ஆகிய மூவரும் நேற்றிரவு வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது சென்னையிலிருந்து பெங்களூர் நோக்கி கார்களை ஏற்றிக் கொண்டு மின்னல் வேகத்தில் பெரிய டிரக் வந்து கொண்டிருந்தது. போலீசார் 3 பேரும், அந்த லாரியை சோதனை செய்வதற்காக சிகப்பு விளக்கு மற்றும் டார்ச் லைட் மூலம் நிறுத்த சைகை காட்டினர்.
ஆனால் லாரி டிரைவர் நிறுத்தாமல், போலீசார் மீது மோதும் நிலையில் தாறுமாறாக ஓட்டி வந்துள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸ் எஸ்ஐ ராஜகோபாலும், ஏட்டு மாரிமுத்துவும் ரோட்டை விட்டு தாவியதால் உயிர் தப்பினர்.
ஆனால் மற்றொரு தலைமைக் காவலர் கருணாகரன் மீது லாரி பயங்கரமாக மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். உடனே எஸ்.ஐ ராஜகோபால் அந்த லாரியை ஜீப்பில் விரட்டி சென்று மடக்கினார். டிரைவர் ஜெருமந்தராஜை கைது செய்தார்.
லாரியில் இருந்த இன்னொரு டிரைவர் மற்றும் கிளீனரும் ஓடிவிட்டனர். இவர்கள் அனைவரும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
இதில் பலியான ஏட்டு கருணாகரன் கேரள மாநிலம் திருவாரியை சேர்ந்தவர். இவருக்கு வனஜா(46) என்ற மனைவியும், ஹரிகுமார், உன்னி கிருஷ்ணன் என்ற மகன்களும் இருக்கிறார்கள். கருணாகரனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
தப்பிஓடிய லாரி கிளீனர் மற்றும் இன்னொரு டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications