என்னைப் பற்றி விமர்சிப்பதா? மேடையில்கண்ணீர் விட்டு அழுத அழகிரி!
மதுரை:மதுரையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய முதல்வரின் மகன் மு.க.அழகிரி, திமுகவுக்காக உயிரைக் கொடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன். என்னைப் பற்றி விமர்சிக்கிறார்கள். அதுகுறித்து நான் கவலைப்படவில்லை என்று கூறி மேடையிலேயே அழுதார். இதைப் பார்த்து மேடையில் இருந்த திமுக நிர்வாகிகளும் கண்ணீர் விட்டு அழுதனர்.
![]() |
மதுரை மேற்குத் தொகுதி இடைத்த தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் ராஜேந்திரன் வெற்றிக்காக பாடுபட்டவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மு.க.அழகிரி கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் உருக்கமாக பேசினார். அழகிரி பேசுகையில், இந்தப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் எல்லாம் எனக்குச் சேர வேண்டியதல்ல. அனைத்துமே திமுக தொண்டர்களுக்குத்தான் போக வேண்டும்.
அப்படிப்பட்ட தொண்டர்களுக்காக வாழும் கலைஞருக்குத்தான் இந்தப் பாராட்டும், மரியாதைகளும் போய்ச் சேர வேண்டும். இங்கு எனக்களித்த பெருமைகள், பாராட்டுக்களை கலைஞருக்கு சமர்ப்பிக்கிறேன்.
நான் திமுகவில் உயர்ந்த பதவிக்கு வர வேண்டும் என்று கூறினார்கள். எனக்கு திமுகவில் சாதாரண தொண்டராக இருப்பதில்தான் பெருமை. அதைத்தான் நான் எப்போதும் விரும்புகிறேன். எனக்கு வேறு எதுவும் தேவையில்லை.
மதுரை மேற்கில் வென்ற செய்தியோடு கலைஞரைச் சந்தித்தபோது, என்னைக் கட்டித் தழுவிக் கொண்டு, எப்படி இதை சாதித்தாய் என்றார். அதற்கு நான், எல்லாம் நீங்கள் கற்றுக் கொடுத்த பாடம்தான் என்றேன். கலைஞரே வாழ்த்தி விட்டார், பாராட்டி விட்டார். இதை விட வேறு என்ன வேண்டும்.
திமுக தொண்டன் போர்க்குணம் கொண்டவன். இடைத் தேர்தல்தானே என்று கருதாமல் சூறாவளியாக சுழன்று பணியாற்றி வெற்றிக் கனியைப் பறித்தனர் திமுக தொண்டர்கள். இதை வரும் தேர்தல்களிலும் அவர்கள் நிரூபிப்பார்கள். நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்த வெற்றி எதிரொலிக்க வேண்டும்.
என்னை பலரும் விமர்சிக்கிறார்கள். ஆனால் அதற்காக நான் கவலைப்படவில்லை. திமுகவுக்காகவும், என்னை நம்பியுள்ள தொண்டர்களுக்காகவும் நான் உயிரையேக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன் என்று கூறிய அழகிரி அதிக உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தார்.
இதைப் பார்த்த மேடையில் இருந்த மாவட்ட செயலாளர் வேலுச்சாமி, துணை மேயர் பி.எம்.மன்னன் உள்ளிட்டோரும் கண்ணீர் விட்டு அழுததால் மேடையே உருக்கமாகிப் போனது.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?













Click it and Unblock the Notifications