47 வயது கள்ளக்காதலரை தாயுடன் சேர்ந்துகொன்று புதைத்த 20 வயது பெண்!
மண்டபம்:பலருடன் தான் கள்ளக்காதல் கொண்டிருப்பதை கண்டித்த, கள்ளக்காதலரை தனது தாயுடன் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொன்று, வீட்டுக்குப் பின்புறம் உள்ள குழியில் போட்டுப் புதைத்த பெண்ணைப் போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கு வயது 47. பனை ஏறும் தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 20 வயதுப் பெண் மாலதிக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
செல்வத்தைப் போல ஏகப்பட்ட பேருடன் தொடர்பு வைத்திருக்கிறார் மாலதி. அப்பகுதி ஆண்கள் எல்லாம் மாலதியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தனர். இதனால் செல்வம் அப்செட் ஆனார். நீ என்னுடன் மட்டும் குடும்பம் நடத்து என்று கூறியுள்ளார்.
இருவரும் சில காலம் கணவன், மனைவி போல வாழ்ந்துள்ளனர். இந்த நிலையில் திடீரென செல்வத்தைக் காணவில்லை. இதுகுறித்து செல்வத்தின் மனைவி சத்தியவாணி போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் மாலதியை விசாரித்தனர். அப்போது அவர்தான் கொலை செய்து வீட்டுக்குப் பின்புறம் புதைத்திருப்பது தெரிய வந்தது.
செல்வத்தின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து மாலதியிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், என்னுடன் மட்டும்தான் குடும்பம் நடத்த வேண்டும் என செல்வம் வற்புறுத்தினார். அது எனக்குப் பிடிக்கவில்லை.
இந்த நிலையில் என்னை சந்திக்க திருப்பூரிலிருந்து சுரேஷ் என்பவர் அடிக்கடி வருவார். அதை செல்வம் கண்டித்தார். இதனால் நான் கோபமடைந்தேன். எனது தாயாருடன் ஆலோசித்ததில், செல்வத்தைக் கொன்று விட முடிவு செய்தோம்.
அதன்படி கடந்த 9ம் தேதி செல்வம் எனது வீட்டுக்கு இரவில் போதையில் வந்தார். அப்போது நானும், எனது அம்மாவும் சேர்ந்து கழுத்தை நெரித்தோம். அதில் அவர் மயங்கி விழுந்தார். பிறகு செங்கல்லால் தலையில் சரமாரியாக அடித்துக் கொலை செய்தோம். பின்னர் ஏற்கனவே வெட்டி வைத்திருந்த குழியில் போட்டு அவரை மூடி விட்டோம் என்று படு கூலாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications