மீனவர் வலையில் சிக்கிய வெடிபொருள்
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டனம்:நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்த மீனவர்களின் வலையில், வெடிபொருட்கள் நிறைந்த பிளாஸ்டிக் பெட்டி சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
![]() |
நாகை மாவட்டம் கோடியக்கரை கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது முனியப்பன் என்பவரின் வலையில் ஒரு பிளாஸ்டிக் பெட்டி சிக்கியது.
இதையடுத்து அந்தப் பெட்டியை மீனவர்கள் எடுத்துப் பார்த்தனர். பெட்டியின் மீது வெடிபொருள் என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து அந்தப் பெட்டியை போலீஸாரிடம் மீனவர்கள் ஒப்படைத்தனர்.
வேதாரண்யம் போலீஸார் அந்தப் பெட்டியைக் கைப்பற்றி, வெடிபொருள் நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பார்த்த பின்னரே பெட்டியில் என்ன உள்ளது என்பது தெரிய வரும்.
போலீஸார் அந்த வெடிபொருள் பெட்டியை பாதுகாப்பாக வைத்துள்ளனர்.













Click it and Unblock the Notifications