ஈழத் தமிழர்களுக்கு படகுகள் மூலம் செப். 7 முதல் உணவு, மருந்து விநியோகம்!

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு வழங்குவதற்காக சேகரிக்கப்பட்டுள்ள உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வருகிற செப்டம்பர் 7ம் தேதி முதல் படகுகளில் கொண்டு செல்லப் போவதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் அறிவித்துள்ளார்.

Nedumaran

தஞ்சையில் பழ. நெடுமாறன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், சிங்கள ராணுவத்தின் அடக்கு முறையால் யாழ்பாணத்தில் 5 லட்சம் மக்கள், பசி பட்டியால் வாடி வதங்குகிறார்கள்.

இவர்களுக்கு உதவ தமிழக மக்கள் அளித்த ஒரு கோடி மதிப்பிலான மருந்து மற்றும் உணவு பொருட்கள் வழங்க உள்ளோம்.

இதை இந்திய செஞ்சிலுவை சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மூலம் கொடுக்க முயன்றோம். ஆனால் மத்திய அரசு அனுமதி வழங்காமல் மவுனம் சாதிக்கிறது.

மதிமுக பொது செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோர் பிரதமரிடம் நேரிலும், கடிதம் முலமும் அனுமதி கேட்டு முறையிட்டும் அனுமதி கிடைக்கவில்லை.

எனவே ஈழதமிழர்களுக்கு உணவு மருந்து பொருட்கள் கொடுத்து உதவ திருச்சியில் செப் 7-ந் தேதி மதிமுக பொது செயலாளர் வைகோ தலைமையிலும், மதுரையில் டாக்டர் ராமதாஸ் தலைமையிலும், 11-ந் தேதி நாகையில் விடுதலைச் சிறுத்தைகள் பொது செயலாளர் திருமாவளவன் தலைமையிலும், ராமேஸ்வரத்தில் இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது தலைமையிலும் பொருட்கள் வழியனுப்பி வைக்கப்படவுள்ளன என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+