புரோட்டா தருவதாக கூறி சிறுமி கற்பழிப்பு:காமவெறி இளைஞர் கைது
அவினாசி:புரோட்டா வாங்கித் தருவதாக கூறி 5ம் வகுப்பு படித்து வரும் சிறுமியை கற்பழித்த காம வெறி பிடித்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் அவினாசி ஏ.டி காலனியை சேர்ந்தவர் பழனி. இவரது மகள் சங்கரம்மாள். அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.
பழனிக்கு குடிப் பழக்கம் உண்டு. இதனால் சரிவர வேலைக்கு போக மாட்டார். பழனியின் மனைவி சமீபத்தில் இறந்தார். பொறுப்பற்ற தந்தையின் பாதுகாப்பில் இருந்து வந்த சங்கரம்மாள் மீது ஊர் மக்களுக்கு அதிக பாசம். தங்களது பிள்ளை போல நினைத்து ஊர் மக்களே உணவு, உடை கொடுத்து படிக்க வைத்து வருகின்றனர். அந்த ஊரின் தத்துப் பிள்ளையாகவே இருந்து வருகிறார் சங்கரம்மாள்.
அதே ஊரில் வசிக்கும் முருகேஷ் என்பவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. சம்பவ நாளன்று விளையாடிக்கொண்டு இருந்த சிறுமி சங்கரம்மாளை அழைத்து புரோட்டா வாங்கி தருவதாக கூறி தனது வண்டியில் ஏற்றி சென்று தாசராபாளையம் அருகில் உள்ள ஒரு காட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார் முருகேஷ்.
அப்போது நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. இந்த நிலையில், சங்கரம்மாளை கட்டாயப்படுத்தி, கொட்டும் மழையில் அந்த சிறுமியை நாசப்படுத்தி விட்டார் முருகேஷ். பின்னர் இதுகுறித்து யாரிடமும் சொல்ல கூடாது என மிரட்டியுள்ளார்.
இந்த நிலையில் விஷயம் ஊர் மக்களுக்கு தெரிய வரவே, ஆத்திரமடைந்த அனைவரும் ஒன்று திரண்டு முருகேஷைப் பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர் போலீஸில் ஒப்படைத்தனர். முருகேஷை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications