பழனி விபத்து- அறநிலையத்துறை அமைச்சர் பதவி விலக பாஜக கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

பழனி:பழனியில் நேற்று நடந்த ரோப் கார் விபத்துக்கு அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என பாஜகவினர் இன்று பழனியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பழனி மலையில் நேற்று மாலை திடீரென ரோப் கார் அறுத்து விழுந்து 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பழனி நகரை மட்டுமல்லாது தமிழகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் பழனியில் தற்போது ரோப் கார் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தை பார்வையிட அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று பழனிக்கு வந்தார்.

பாஜகவினர் ஆர்ப்பாட்டம்:

அப்போது இளைஞரனி மாநில துணைத் தலைவர் கருப்புசாமி தலைமையில் பாத விநாயகர் கோவில் அருகே பாஜகவினர் ஆர்பாட்டம் நடத்தினர்.

பலியானவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும், விபத்துக்கு காரணமான அதிகாரியை பணி நீக்கம் செய்யவேண்டும், ரோப் கார் பணியை செய்து தந்த நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்ய வேண்டும்,

இவை எல்லாவற்றிருக்கும் தார்மீக பொறுப்பேற்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் பெரியகருப்பன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அவர்களை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+