காதல் கல்யாணத்திற்குத் துணை போனமாணவருக்கு அடி - போலீஸ்காரர் கைது
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:தனது தங்கை காதல் கல்யாணம் செய்து கொள்ள உதவிய சட்டக் கல்லூரி மாணவரைத் தாக்கிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள வாசுதேவநல்லூரைச் சேர்ந்த சி.எஸ்.எப் போலீஸ்காரர் வீரப்பன்.
இவரது சகோதரி காளியம்மாள். இவர் நெல்லை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் சில தினங்களுக்கு முன்பு இப்பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் காதலன் ராஜேந்திரனுடன் சேர்ந்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் கல்யாணத்திற்கு சட்டக் கல்லூரி மாணவர் பூபதி துணையாக இருந்துள்ளார்.
இதை அறிந்து கோபமுற்ற வீரப்பன் திருமணத்திற்கு துணையாக சென்ற பூபதியை தாக்கியுள்ளார். இதுதொடர்பாக சிவகிரி காவல் நிலையத்தில் பூபதி புகார் கொடுத்தார். அதன் பேரில் வீரப்பனை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications