விஜயகாந்த்தை காங். கூட்டணியில் சேர்க்கமுன்னாள் அமைச்சர் ராஜாமுகமது முயற்சி
டெல்லி:காங்கிரஸ் கூட்டணியில் நடிகர் விஜயகாந்த்தன் தேமுதிகவை இணைக்க தீவிரமாக முயற்சிகள் நடந்து வருவதாக முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜமுகம்மது கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர் ராஜா முகம்மது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டார்.
இதனால் அரசியலில் இருந்தே ஒதுங்கியிருந்தவர் சமீபகாலமாக மீண்டும் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளார்.
ெஜயலலிதாவுக்கு எதிரான கட்சிகளை ஓரணியில் சேர்க்கும் புதிய முயற்சியிலும் அவர் இறங்கியுள்ளார்.
டெல்லி சென்றுள்ள ராஜா முகம்மது அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஜெயலலிதாவுக்கு தமிழகத்தில் செல்வாக்கு முற்றிலும் சரிந்து விட்டது. மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவராக ஜெயலலிதா உள்ளார்.
எனவே அவரை 3வது அணிக் கட்சிகள் நிராகரிக்க வேண்டும். அவரை மூன்றாவது அணித் தலைவராக நியமித்தால் அந்தக் கூட்டணிக்கே எதிர்காலம் இருக்காது.
விஜயகாந்த்துக்கு பெரும் மக்கள் செல்வாக்கு உள்ளது. கிராமப் புறங்களில் அவருக்கு நல்ல ஆதரவு காணப்படுகிறது. எனவே அவரை காங்கிரஸ் கட்சி தனது கூட்டணியில் சேர்ப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளேன் என்றார் ராஜா முகம்மது.
இவர் சொல்வதை கேட்க சொந்த ஊரிலேயே ஆளில்லை. டெல்லியில் யாராவது கேட்பார்களா என்பது தெரியவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications