மீண்டும் வேண்டும் பொடா- அதிமுக கோரிக்கை
டெல்லி:மீண்டும் பொடா சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
ஹைதராபாத் குண்டுவெடிப்பு குறித்து மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் அதிமுக எம்பி மைத்ரேயன் பேசுகையில்,
மத்திய அரசுக் கூட்டணிக்கு கடந்த ஒரு வாரமாக (இடதுசாரிகளால்) நிலவி வந்த அச்சுறுத்தல் நீங்கிவிட்டதாகத் தெரிகிறது. ஆனால் தீவிரவாதிகளால் இந்த நாட்டுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் நீங்கவில்லை. மாறாக, அவை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டுள்ளன.
மத்திய அரசு வேண்டுமானால் பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் நாடும், மக்களும் பாதுகாப்பாக இல்லை.
தினமும் ஏதாவது நகரில் குண்டு வெடிப்பு, பலர் பலியாதல் என்பது வாடிக்கையாகிவிட்டது. இதற்கு பிரதமரும் உள்துறை அமைச்சரும் கண்டனம் தெரிவிப்பதும், மக்கள் அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுப்பதும், பங்கரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுப்பதும் வழக்கமாகி விட்டது.
பங்கரவாத தாக்குதல்களுக்கு இது மனசாட்சியில்லாத பதில். ஹைதராபாத்தில் தாக்குதல் நடக்கும் என்பது முன்கூட்டியே தெரியும் என்கிறார் உள்துறை அமைச்சர். ஆனால், எப்போது, எங்கு, யாரால் தாக்குதல் நடக்கும் என்பது தெரியாமல் போனது வேதனை.
எங்கு தாக்குதல் நடத்தப் போகிறோம் என்று பங்கரவாதிகள் ப்ளூ பிரின்ட் போட்டு தன்னிடம் தந்துவிட வேண்டும் எதிர்பார்க்கிறதா மத்திய அரசு?.
இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும் நடைபெற்ற பங்கரவாத சம்பவங்கள் குறித்து வெள்ளை அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும். எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர், என்ன தண்டனை அளிக்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் தர வேண்டும் வேண்டும்.
பொடா சட்டத்தை ரத்து செய்ததால் தான் நாட்டிற்கு இவ்வளவு கேடுகளும் ஏற்படுகின்றன. எனவே, பொடா சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றார் மைத்ரேயன்.(வைகோ பார்த்து இருப்பது நல்லது)
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications