கனடாவில் ஒரு லேடி சின்னி ஜெயந்த்!!
டோரண்டோ:பிற மொழிகள் போர் அடித்ததால், தானே ஒரு புதுமொழியைக் கண்டுபிடித்து பேசி வருகிறார் கனடாவைச் சேர்ந்த 28 வயது இளைஞி.
![]() |
நாமெல்லாம் போர் அடித்தால் ஏதாவது சினிமா பார்ப்போம், கடை வீதிக்குப் போய் ஒரு ரவுண்டு அடிப்போம், அல்லது சும்மாவாவது அமர்ந்து கொட்டாவி விட்டுக் கொண்டிருப்போம.
ஆனால் டோரண்டோவைச் சேர்ந்த 28 வயது இளம் பெண் சோன்ஜா எலன் கிஸா சற்றே வித்தியாசமானவர்.
உலகில் உள்ள பல்வேறு மொழிகளையும் கற்றுத் தேர்ந்தவர் கிஸா. கல்லூரி மாணவியான கிஸா மொழிபெயர்ப்பாளராகவும் உள்ளார்.
பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மன் என பல மொழிகளையும் அறிந்த
கிஸாவுக்கு, எந்த மொழியிலும் விசேஷம் இருப்பது போலத் தெரியவில்லை.
பல மொழிகள் படித்தும் கூட எந்த மொழியிலும் தனக்குத் திருப்தி வரவில்லை. எத்தனை நாட்களுக்குத்தான் இந்த மொழிகளையே பேசிக் கொண்டிருப்பது, ஒரே போராக இருக்கிறதே என்று யோசித்துள்ளார்.
இதையடுத்து கடுமையான முயற்சிக்குப் பின் தானே ஒரு புது மொழியை உருவாக்கிவிட்டார்.
இந்த மொழிக்கு டோகி போனா (அதாவது நல்ல மொழி என்று அர்த்தமாம்) என்று அதற்குப் பெயரிட்டார். இதில் 120 வார்த்தைகள் மட்டும்தான் உள்ளன.
இப்போதெல்லாம் இந்த மொழியில்தான் அவர் பேசி வருகிறார். கிஸாவின் மொழியால் ஆர்வமடைந்த மேலும் பலரும் போனால் போகிறது என்று டோகி போனா மொழியை கற்று பேசத் தொடங்கியுள்ளனராம்.
அப்படி இப்படி என்று பரவி இப்போது கிஸாவுடன் சேர்த்து100 பேர் டோகி போனாவை பேசி வருகிறார்களாம்.
மொழியைக் கண்டுபிடித்த கையோடு அந்தப் புது மொழியில் பாடல்கள், கவிதைகள், உரையாடல்களையும் உருவாக்கியுள்ளார் கிஸா. இவரது புதிய மொழி குறித்த விவரங்கள் www.langmaker.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பார்த்து பலரும் கிஸாவைத் தொடர்பு கொண்டு புது மொழி குறித்து அறிந்து வருகிறார்களாம்.
அலே லி போனா! (எல்லாம் நல்லதாக முடியட்டும் என்று அர்த்தமாம்)
நம்ம சின்னி ஜெயந்த் கூடத்தான் ஜில்பாங்ஸ் மொழியை ரொம்ப காலத்துக்கு முன்பே உருவாக்கி அவர் மட்டும் பேசிக்கிட்டு இருக்காரு!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications