சென்னை பல்கலை: மாணவர்களுக்கு ஐ.டி. நிறுவனவேலை கிடைத்தால் ஆசிரியர்களுக்கு பரிசு!
சென்னை:சென்னை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களில் வேலை கிடைத்தால், அவர்களுக்குப் பாடம் நடத்திய ஆசிரியர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கும் திட்டத்தை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு புதிய பயிற்சித் திட்டத்தை இந்திய தொழிலக கூட்டமைப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த 75 நாட்களில் 121 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமச்சந்திரன் பேசுகையில், இந்த்த திட்டத்தின் வெற்றி, எத்தனை மாணவர்களுக்கு வேலை கிடைக்கிறது என்பதைப் பொருத்துத்தான் தெரிய வரும்.
எனவே சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களில் வேலை கிடைத்தால், அவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களுக்கு ரொக்கப் பரிசு அளிக்கப்படும்.
ஒரு மாணவருக்கு வேலை கிடைத்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு ரூ. 1000 பரிசு தரப்படும். 2 பேருக்கு கிடைத்தால் ரூ. 2000 வழங்கப்படும். இந்தப் பரிசினை சம்பந்தப்பட்ட மாணவர் அல்லது மாணவியை வேலைக்கு எடுக்கும் நிறுவனமே வழங்கும் என்றார்.
இந்தப் பயிற்சித் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு தற்ேபாைதய தேவைக்கேற்ப எப்படி பாடம் நடத்துவது, மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்துவது, பேச்சுத் திறமை மற்றும் வேலைச் சூழலுக்குத் தேவையான திறமைகளை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
பின்னர் ஆசிரியர்கள் இந்தப் பயிற்சியை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களுக்கு போதிப்பார்கள்.
-
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications