சித்தி மகளை கடத்திய மாணவன் கைது
சென்னை:செலவுக்கு பணம் கொடுக்காத சித்தி மகளை கடத்திய பாலிடெக்னிக் மாணவனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கீழ்பாக்கம் லோட்டஸ் காலனியைச் சேர்ந்தவர் மேரி சித்ரா- பால் தம்பதியின் மகள் மகள் இசா இவாஞ்ஜெலின்(வயது 8). பால் பெங்களூரில் பணியாற்றி வருகிறார்.
![]() |
மேரியின் அக்கா மகன் வினித் விஜய்(19) என்பவர் மேரியின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். இவருக்கு தாய், தந்தை இல்லை. வினித்தின் கல்வி உட்பட அனைத்து செலவுகளுக்கும் மேரி சித்ரா பணம் கொடுத்து வளர்த்துள்ளார்.
வேலூரில் உள்ள பாலிடெக்னிக்கில் 2ம் ஆண்டு படிக்கும் வினித், கடந்த சில நாட்களாக பாலிடெக்னிக் செல்லாமல் சித்தி வீட்டிலேயே இருந்துள்ளார்.
மேரி கேட்டதற்கு பாலிடெக்னிக்கிற்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக பொய் கூறினார்.இந் நிலையில் பாலிடெக்னிக்கின் பிரின்ஸ்பாலிடம் இருந்து மேரிக்கு போன் வந்தது.
வினித்தின் நடவடிக்கைகள் சரியில்லாததால் பாலிடெக்னிக்கில் இருந்து ஸ்மிஸ் செய்து விட்டோம் என்று பிரின்சிபால் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மேரி சித்ரா, வினித்தை கடுமையாக திட்டியுள்ளார்.
மேலும் வினீத் செலவுக்கு பணம் கேட்கவே, தர மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த வினித், சித்தி மகள் இசாவை பள்ளியிலிருந்து கடத்தி சென்றுவிட்டார். இந் நிலையில் பள்ளிக்கு சென்ற குழந்தை இசாவை காணாமல் தவித்த மேரி ஸ்கூலுக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது அவர்கள், ஒரு பையன் வந்து அழைத்து சென்றதாக கூறியுள்னர்.
இது குறித்து கீழ்ப்பாக்கம் போலீசில் புகார் செய்தார் மேரி. இந் நிலையில் நேற்றிரவு மேரியின் செல்போனுக்கு வினித் போன் செய்து நலம் விசாரித்துள்ளான். அவனிடம் குழந்தையை பார்த்தாயா என்று கேட்டதற்கு தெரியாது என சொல்லிவிட்டு போனை கட் செய்துள்ளான்.
பின்னர் மீண்டும் 30 நிமிடங்கள் கழித்து மேரிக்கு போன் செய்த வினித், உங்கள் குழந்தை என்னிடம் தான் இருக்கிறாள். இசா உயிரோடு வேண்டுமானால் ரூ. 10,000த்தை எடுத்துக் கொண்டு திருவல்லிக்கேணி ஸ்டார் தியேட்டர் அருகே வருமாறு கூறியுள்ளான்.
இது குறித்தும் போலீசாருக்கு மேரி தகவல் கொடுத்தார். இந் நிலையில் வினித் மீண்டும் மேரிக்கு போன் செய்து திருவல்லிக்கேணி வர வேண்டாம், லைட் ஹவுஸ் பக்கத்தில் பணத்தோடு வா என்று கூறினான்.
மேரியின் செல்போனில் பதிவான நம்பரை போலீசார் தொடர்பு கொண்டபோது, இது டெலிபோன் பூத், இப்போது தான் கரூநீல நிற டி-சர்ட் அணிந்த வாலிபர் பேசிவிட்டுப் போனார் என்று தகவல் கிடைத்தது.
இதையடுத்து ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அந்தப் பகுதிக்கு விரைந்து அங்கு சுற்றிக் கொண்டிருந்த வினீத்தைப் பிடித்தனர்.
போலீசார் அவனிடம் விசாரித்தபோது இசாவை ஒரு லாட்ஜில் வைத்திருப்பதாகக் கூறினான். வினித்துடன் லாட்ஜூக்கு சென்ற போலீசார் அங்கு தூங்கிக் கொண்டிருந்த குழந்தை இசாவை மீட்டு மேரியிடம் ஒப்படைத்தனர்.
வினித்தை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.













Click it and Unblock the Notifications