திருச்செந்தூர் ஆவணி திருவிழா நாளை ஆரம்பம்
திருச்செந்தூர்:
முருக கடவுளின் அறுபடை வீடான திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாளை (31ம் தேதி) ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
![]() |
நாளை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படும். அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறும்.
காலை 5 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள்:
செப்டம்பர் 6ம் தேதி ஏழாம் திருநாள் நடைபெறும். இந்நாளில் மாலை 4 மணியளவில் சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் செம்பட்டு அணிந்து தங்க சப்பரத்தில் எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்
7ம் தேதி அதிகாலை 4 மணிக்கு சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் வெண்பட்டு சாத்தி வெள்ளி சப்பரத்தில் எட்டு வீதிகளிலும் உலா வருவார்.
பின்னர் சுவாமி சண்முக வள்ளி தெய்வானையுடன் பச்சை நிற பட்டு அணிந்து பச்சைநிற கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வருவார்.
9ம் தேதி தேரோட்டம் நடைபெறும்.
இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகமும், திருச்செந்தூர் நகராட்சியும் செய்துள்ளன.
ஆவணித் திருவிழாவை முன்னிட்டு பல ஊர்களில் இருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!













Click it and Unblock the Notifications