எடப்பாடி காலி.. அதிமுக பொதுச் செயலாளராகும் ஆர்பி உதயகுமார்? போட்டுத் தாக்கிய சிடிஆர் நிர்மல்குமார்
மதுரை: ஆர்பி உதயகுமார் அதிமுக பொதுச்செயலாளராக முயற்சிக்கிறார். அனிதா ராதாகிருஷ்ணன் பதட்டத்தில் மன நிலை பாதிக்கப்பட்டவர் போல பேசிவருகிறார் என சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் கூறியுள்ளார். மேலும், திமுக எப்போதும் தனியாக நின்று 50 சீட்டுகள் கூட வாங்க முடியாது. திமுக கூட்டணி கட்சியால் தான் கடந்த ஆண்டுகளில் ஆட்சியமைக்க முடிந்தது என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உரிமைகள் திட்டத்தின் கீழ் வட்டார அளவிலான விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்," TNPSC மூலமாக தான் மின்வாரிய பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். பழனி வழக்கு தொடர்பாக விரிவான விசாரணை தேவைப்படுகிறது. நிறையே பேரின் தொடர்புகள் உள்ளது என்பது கணிப்பாக உள்ளது.
சிடிஆர் நிர்மல்குமார்
பல போலி பத்திரங்கள் 5 ஆண்டுகளில் நடந்துள்ளது. இது தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். நிறைய இடத்தில் சட்டவிரோத பதிவுகள் நடந்துள்ளது. போலி பத்திரபதிவுகள் நடந்துள்ளது. இவ்வளவு பெரிய விசாரணை இந்த ஆட்சியில் நடந்துள்ளது. ஒன்றாவது கடந்த ஆட்சியில் சிபிசிஐடி விசாரணை சென்றுள்ளதா? பழனி கோவில் நில விவகாரத்தில் நுணக்கமாக விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
போலி பத்திரப் பதிவு
5 ஆண்டுகளில் போலியாக பதிவு செய்திருந்தால் பொதுமக்கள் புகாரளிக்கலாம். இது கிரிமினல் வழக்கு அரசு நிலங்களை அரசுக்கு தெரியாமல் பதிவு செய்துள்ளனர். பாமகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை
அரசியல் படுத்துதல் என்பது ஆள்புடிக்கிற வேலை இல்லை என்பது குறித்து திருமா பேசியது திமுகவை
குதிரை பேர விவகாரத்தில் பல கோடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
திமுக
திமுக எப்போதும் தனியாக நின்று 50 சீட்டுகள் கூட வாங்க முடியாது. திமுக கூட்டணி கட்சியால் தான் கடந்த ஆண்டுகளில் ஆட்சியமைக்க முடிந்தது. சென்னையில் இருக்கும்போது அறிவாலயம் போகமாட்டார். லண்டனில் இருந்து மாவட்ட செயலாளர் மீட்டிங் நடத்தும் அளவிற்கு கட்சி உள்ளது. பதவிக்கும் கட்சியில் சேருவதற்கும் தொடர்பு இல்லை. அதிமுக எம்எல்ஏக்கள் மக்களை சந்திக்க முடியவில்லை.
ஆர்பி உதயகுமார்
MLAக்களாக தொடர்வது சாதாரண விசயமல்ல. ஆர்பி உதயகுமார் ஓரே கட்சியில் 5 நிலைப்பாடு எடுக்க கூடியவர். ஆர்பி உதயகுமார் அதிமுக பொதுச்செயலாளராக முயற்சிக்கிறார். அனிதா ராதாகிருஷ்ணன் பதட்டத்தில் மன நிலை பாதிக்கப்பட்டவர் போல பேசிவருகிறார். அதிமுகவினர் சென்னையில் முடங்கி கிடக்கின்றனர். அதிமுக எம்எல்ஏக்கள் வெளியில் வரக் கூட முடியவில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications