டிஜிபியாக பதவியேற்றார் ராஜேந்திரன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:தமிழக காவல்துறை தலைவராக (டிஜிபி) பி.ராஜேந்திரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
![]() |
தமிழக டிஜிபியாக இருந்த முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதையடுத்து புதிய டிஜிபியாக பி.ராஜேந்திரன் நியமிக்கப்படுவதாக உள்துறை செயலாளர் மாலதி அறிவித்தார்.
இதையடுத்து இன்று புதிய டிஜிபியாக ராஜேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் பதவியிலிருந்து ஓய்வு பெறும் டி.முகர்ஜி, பொறுப்பை ஒப்படைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி ராஜேந்திரன், தீவிரவாத செயல்கள் தமிழகத்தில் அனுமதிக்கப்பட மாட்டாது. தீவிரவாத முயற்சிகளைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பதவியேற்பு நிகழ்ச்சியில், சட்டம் ஒழுங்கு டிஜிபி விஜயக்குமார், சென்னை மாநர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.













Click it and Unblock the Notifications