சல்மானுக்கு ஜாமீன் கிடைத்தது
ஜோத்பூர்:மான் வேட்டை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ஜோத்பூர் உயர்நீதிமன்றக் கிளை ஜாமீன் அளித்துள்ளது.
![]() |
அரிய வகை சின்காரா மானை வேட்டையாடிய வழக்கில் 5 ஆண்டு சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்ட சல்மான் கான் தற்போது ஜோத்பூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் சிறைக்குப் போய் ஒரு வாரமாகி விட்டது. அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு முதலில் நீதிபதி வியாஸிடம் சென்றது. ஆனால் அவர் விசாரிக்க மறுத்து விட்டார்.
இதையடுத்து வேறு நீதிபதி முன்பு நேற்று வந்தது. அவர் இன்றைக்கு விசாரணையை ஒத்திவைத்தார். இன்று சல்மான் ஜாமீன் மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த நீதிபதி, சல்மான் கானுக்கு ரூ. 1 லட்சம் உத்தரவாதம் மற்றும் ரூ. 50 ஆயிரம் பிணைத் தொகையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும், தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரும் மனு மீதான விசாரணை அக்டோபர் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சல்மான் கான் இன்று மாலைக்குள் விடுதலை ஆகக் கூடும். அவரை மும்பைக்கு அழைத்துச் செல்வதற்காக தனியார் விமானம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு ஜோத்பூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்













Click it and Unblock the Notifications