வன்னியில் புலிகள் - ராணுவம் கடும் சண்டை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:வவுனியா மாவட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓமந்தைப் பகுதியில் ராணுவத்தினர் புதிய தாக்குதலைத் தொடங்கியுள்ளனர். விடுதலைப் புலிகளுடன் அவர்கள் தீவிர சண்டையில் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை செய்திகள் தெரிவிக்கின்றன.
இப்பகுதியில் புதிய தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் தயாராவதைத் தடுக்கும் வகையிலேயே ராணுவம் தற்போதைய தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு தரப்புக்கும் இைடேய நடந்து வரும் இந்த சண்டையில் உயிரிழப்பு குறித்த தகவல்கள் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications