கல்விக்காக ரூ. 2.77 லட்சம் கோடி!:br/பிரதமரின் கனவுத் திட்டம் நிஜமாகிறது
டெல்லி: நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு கல்லூரியை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான நிதியை வரும் 11வது ஐந்தாண்டு திட்டத்தில் ஒதுக்க பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளார். நாளை நடக்கவுள்ள திட்டக் கமிஷனின் முக்கிய கூட்டத்தில் நாட்டின் கல்வித்துறையின் மேம்பாட்டுக்காக ரூ. 2.77 லட்சம் கோடியை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கல்வித்துறையை மேம்படுத்துவது தனது கனவுத் திட்டம் என கடந்த சுதந்திர தின விழாவில் உரையாற்றியபோது மன்ேமாகன் சிங் குறிப்பிட்டது நினைவுகூறத்தக்கது.
பேசியதோடு நின்றுவிடாமல் அடுத்த 5 ஆண்டுகளில் கல்விக்காக ரூ. 2.77 லட்சம் கோடியையும் ஒதுக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிதியில் நாட்டில் மேலும் 7 ஐஐடிக்களையும் 8 ஐஐஎம்களையும் நிறுவவும், மாவட்டந்தோறும் குறைந்தபட்சம் ஒரு கல்லூரியை நிறுவவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கல்விக்காக ஒரு ஐந்தாண்டு திட்டத்தில் இவ்வளவு பெரிய தொகை ஒதுக்கப்படவுள்ளது இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாகும்.












Click it and Unblock the Notifications