கள்ளர், மறவரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர்br/பட்டியலில் சேர்க்க கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: கள்ளர், மறவர், அகமுடையார் ஆகியோரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என அதிமுக கூட்டணியில் உள்ள மூவேந்தர் முன்னேற்ற கழக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுக்கோட்டையில் மூவேந்தர் முன்னேற்ற கழக மாநாடு முள்ளூரில் நடைபெற்றது. இம் மாநாட்டிற்கு கட்சியின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தலைமை வகித்தார். இதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ப்பட்டன.
நதி நீர் பிரச்சனை விவசாயிகளின் உயிர் பிரச்சனை. எனவே குறுகிய காலத்தில் அதிக செலவு செய்யாமல் தென்னக நதிகளை இணைக்க வேண்டும்.
கள்ளர், மறவர், அகமுடையார், வல்லம்பர், மணியக்காரர், கருமறவர், இளமறவர் அம்பலகாரர் ஆகியோரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications