பள்ளி அருகே டாஸ்மாக் மதுக்கடை-கலெக்டர்br/அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்
கோவை:
கோவையில், மருதமலை சுப்ரமணியசுவாமி கோவில் தேவஸ்தான பள்ளிக்கூடம் அருகே டாஸ்மாக் கடை வைக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோவை புறநகரான வடவள்ளியில், மருதமலை முருகன் கோவிலுக்குச் சொந்தமான பள்ளிக் கூடம் உள்ளது. இங்கு ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளிக்கூடத்திற்கு அருகே டாஸ்மாக் மதுக் கடை சமீபத்தில் திறக்கப்பட்டது. இங்கு குடிக்க வரும் குடிமக்கள் குடித்து விட்டு நேராக பள்ளிக்கூட வளாகத்திற்குள் வந்து தாறுமாறாக பேசுவதும், வாந்தி எடுப்பதும், மண்ணில் புரள்வதுமாக இருந்துள்ளனர்.
இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மதுக் கடையை உடனடியாக மாற்றுமாறு போலீஸாருக்கும், மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் புகார்கள் பறந்தன. ஆனால் வழக்கம் போல ஒரு நடவடிக்கையும் இல்லை.
பொறுத்துப் பார்த்த மாணவர்களும், ஆசிரியர்களும் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு விரைந்தனர். அனைவரும் ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்திற்குள் முற்றுகைப் போராட்டத்தில் குதித்தனர். அவர்களுடன் பெற்றோர்களும் பங்கேற்றனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மதுக் கடையை உடனடியாக மாற்ற வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள மாணவர்களுக்கு 10 வயதுக்குள்தான் இருக்கும்.
காமராஜர் கல்விக் கூடங்களைத் திறந்து வைத்தார், படிக்காத மாணவர்களையும் படிக்க வைத்தார். ஆனால் இன்றோ ..?












Click it and Unblock the Notifications