இன்று கோகுலாஷ்டமி- விசேஷ பூஜைகள்br/கிருஷ்ணர் வேடமிட்டு 'குதூகலம்'
சென்னை:
கிருஷ்ண பரமாத்மா அவதரித்த நாளான இன்று நாடு முழுவதும் கோகுலாஷ்டமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
![]() | ![]() |
![]() | ![]() |
இதையொட்டி கோவில்களில் விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் பங்கேற்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
அஷ்டமி தினத்தில் அவதரித்தவன் கிருஷ்ணன். அஷ்டமி என்றாலே அந்த நாளில் விசேஷங்கள் செய்வதில்லை இந்துக்கள். ஆனால் கிருஷ்ணர் பிறந்த அஷ்டமி நாளில், அதாவது கோகுலாஷ்டமி நாளை வெகு விமரிசையாக இந்துக்கள் கொண்டாடுகின்றனர். அத்தகைய சிறப்புப் பெற்றவன் கிருஷ்ணன்.
நவநீத கிருஷ்ணன், கண்ணன், கார்மேகன், கார்வண்ணன், கருப்பன், சின்னக் கண்ணன் என பல பெயர்களில் அறியப்படும் கிருஷ்ணரின் பிறந்த நாளான கோகுலாஷ்டமி வட மாநிலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில், கோகுலாஷ்டமி இன்று நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்களிலும், வீடுகளிலும் சிறப்பு பூஜைகள், நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோகுலாஷ்டமி விழாவையொட்டி நேற்று இரவு உக்ரசீனிவாச மூர்த்திக்கும், ஸ்ரீகிருஷ்ண பகவானுக்கும் ஏகாந்த திருமஞ்சன நிகழ்ச்சி நடந்தது.
இன்று மதியம் கோவில் மலையப்பசாமி, ஸ்ரீகிருஷ்ண பகவான் ஆகியோர் தனித்தனியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
அப்போது ஜீயங்கார் மடம், மகந்து மடம் ஆகியவற்றில் நடந்த உரியடி விழாவிலும் ஏழுமலையான் கலந்து கொண்டு காட்சி தந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கோகுலாஷ்டமி விழா என்பதால் கர்நாடகம், தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர்.
பக்தர்கள் வசதிக்காக கட்டண சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, வசந்த உற்சவம், சஹஸ்ர அலங்கார சேவை போன்ற சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டன.
இதுதவிர குழந்தைகள் கிருஷ்ணர் வேடமிட்டு வரும் நிகழ்ச்சிகளுக்கும் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர். கிருஷ்ணர் வேடமிட்டு வரும் குழந்தைளுக்கான போட்டியும் நடைபெற்றது.
வட மாநிலங்களில் கிருஷ்ணர் வேடமிட்டவர்கள் கலந்து கொள்ளும் பேரணிகளும் இன்று நடக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?
















Click it and Unblock the Notifications