ஜாதி, மதக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை: தேமுதிக
புதுக்கோட்டை:
ஜாதிக் கட்சி, மதக் கட்சி, ஊழல் புரியும் கட்சிகளுடன் தேமுதிக ஒருபோதும் கூட்டணி வைக்காது என்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
தேமுதிக ஆரம்பித்து 3 ஆண்டுகள் ஆவதால் புதுக்கோட்டையில் 3வது ஆண்டு விழாவை அக்கட்சி நடத்தவுள்ளது. இதையொட்டி பிரமாண்ட மாநாடு மற்றும் பேரணி நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக பண்ருட்டி ராமச்சந்திரன் புதுக்கோட்டை வந்திருந்தார். அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சட்டசபைத் தேர்தலைப் பொறுத்தவரை தனித்தே போட்டியிடுவோம். மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து யோசிப்போம்.
அதேசமயம், மதவாத, ஊழல் புரியும் கட்சிகள் மற்றும் ஜாதிக் கட்சிகளுடன் நாங்கள் ஒருபோதும் கூட்டு சேர மாட்டோம்.
தற்போதைய திமுக ஆட்சியைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்லும்படி ஒன்றும் இல்லை. படு மோசமான ஆட்சியை திமுக நடத்தி வருகிறது என்று மட்டுமே சொல்ல முடியும்.
புதுக்கோட்டை தொகுதியை மத்திய அரசும் மறந்து விட்டது, மாநில அரசும் மறந்து விட்டது. ஆனால் நாங்கள் மறக்கவில்லை. அதனால்தான் இங்கு 3வது ஆண்டு விழா மாநாட்டை நடத்துகிறோம்.
தமிழ்நாட்டுக்கே இந்த மாநாடு முன்மாதிரியாக அமையும். லட்சக்கணக்கான தொண்டர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்கள் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications