காவலாளியின் செக்ஸ் டார்ச்சர்-மாணவி தற்கொலை
பெங்களூர்:
விடுதி காவலாளியின் செக்ஸ் தொல்லையால் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பெங்களூர் அருகே பிடுதியில் பசவ கங்கோத்ரி என்ற ஆசிரம பள்ளி உள்ளது. இதில் தங்கி படித்து வந்தவர் சிக்மகளூரைச் சேர்ந்த ஆஷா (15).
சில நாட்களுக்கு முன் தனது பெற்றோருடன் தொலைபேசியில் பேசிய ஆஷா, தன்னை இங்கிருந்து அழைத்து சென்று விடுமாறும், இங்கு தன்னால் இருக்க இயலாது என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து நேற்று ஆஷாவின் பெற்றோர் ஆசிரமத்திற்கு வந்தனர். ஆனால் ஆஷாவை காணவில்லை. பல இடங்களிலும் தேடியபோது ஆசிரம வளாகத்தில் உள்ள ஒரு கிணற்றில் ஆஷா பிணமாகக் கிடந்தார்.
தகவல் கிடைத்ததும் போலீசார் வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் விடுதி காவலாளி ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் பிற மாணவிகளிடமும் விசாரணை நடத்தினர்.
அப்போது விடுதி காவலாளி ஆஷாவுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்தது. செக்ஸ் கொடுமை தாங்காமல் தான் ஆஷா தனது பெற்றோருக்கு போன் செய்து தன்னை இங்கிருந்து அழைத்துச் செல்லுமாறு கூறியதாகத் தெரிகிறது.
இதையடுத்து காவலாளி கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
ஆஷாவின் சகோதரிகள் 3 பேரும் இந்த ஆசிரமத்தில் தான் தங்கி படித்துள்ளனர். ஆனால் அவர்களும் பாதியில் படிப்பை விட்டு விட்டு வீட்டிற்கே சென்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications