அமளி: நாடாளுமன்றம் ஸ்தம்பிப்பு-br/இரு அவைகளும் ஒத்திவைப்பு
டெல்லி
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் கூட்டணி மற்றும் இடது சாரித் தலைவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டதற்குக் கடும் கண்டனம் தெரிவித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்கள் இன்று பெரும் அமளி, துமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஸ்தம்பித்து, அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு அவைகளும் இன்று காலை கூடியதுமே தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் அமளியில் இறங்கின.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அரசு அமைக்க வேண்டும். இடதுசாரிகள், காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் மட்டும் அடங்கிய குழு தேவையில்லை, அதை கலைக்க வேண்டும் அல்லது அதில் பாஜக கூட்டணிக் கட்சிகளையும் இணைக்க வேண்டும் என்று கோரி தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் கோஷமிட்டனர்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக ராஜ்யசபா நான்கு முறை ஒத்திவைக்கப்பட்டது. காலையில் மூன்று முறையும், மாலையில் ஒருமுறையும் அவை ஒத்திவைக்கப்பட்டது. இறுதியில் எந்த அலுவலும் நடைபெறாமல் அவை இன்று முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல லோக்சபா 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மாலையில், 3 மணிக்கு மேல் அவை இன்று முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டது.
பாஜக, தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதாதளம், சமாஜ்வாடி கட்சி ஆகிய கட்சிகளின் எம்.பிக்கள், கூட்டு நாடாளுமன்றக் குழுவை அமைத்தே தீர வேண்டும், நாட்டைக் காக்க வேண்டும் என்று கோஷமிட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
கூட்டு நாடாளுமன்றக் குழுவை அமைக்காமல் தங்களுக்குள் சமரசம் பேச ஒரு குழுவை அமைத்ததன் மூலம் காங்கிரஸ் கட்சி இந்தியாவையும், மக்களையும் அவமதித்து விட்டது என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.
அரசைக் காக்க நாட்டின் நலனை விற்க பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் துணிந்து விட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
எதிர்க்கட்சியினரை அமைதிப்படுத்த நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் சுரேஷ் பச்சோரி எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. அவர் பேசியது என்ன என்று கேட்க முடியாத அளவுக்கு எதிர்க்கட்சி எம்.பிக்களின் சத்தம் ஜாஸ்தியாக இருந்தது.
இரு அவைகளிலும் இவ்வாறு கூச்சல், குழப்பம் நிலவியதால் நாளை வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications