பொதிகையை ரயிலை சென்னை வரை இயக்கbr/கோரி செங்கோட்டையில் போராட்டம்: தடியடி
செங்கோட்டை:
பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு இயக்கக் கோரி இன்று மாபெரும் மறியல் போராட்டம் நடந்தது.
![]() | ![]() |
![]() | ![]() |
தென்காசி - செங்கோட்டை இடையிலான 7 கிமீ அகல ரயில் பாதை பணி முடிந்ததும் செங்கோட்டையிலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இப்பணி முடிவடைந்து, சோதனை ரயில் ஓட்டமும் முடிந்து, ரயில்வே இணை அமைச்சர் வேலு ரயில் பாதையை ஆய்வு செய்த பின்னரும் கூட செங்கோட்டையிலிருந்து ரயில் இயக்கப்படாமல் இருந்து வந்தது.
இதையடுத்து அனைத்துக் கட்சிகள், பொது நல இயங்கங்கள், வர்த்தக சங்கம், மகளிர் சுய உதவி குழுக்கள் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இன்று காலை செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பிருந்து ஊர்வலமாக அனைவரும் கிளம்பினர். 800க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து ெகாண்டனர்.
ரயில் நிலையத்தை வந்தடைந்ததும் அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அங்கு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், குறுக்குப் பாதையில் ரயில் நிலையத்திற்குள் நுழைந்தனர். திமுதிமுவென ஓடியபடி ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி போராட்டம் நடத்தினர்.
அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த போலீஸார் முயன்றனர். இதையடுத்து அவர்களுக்கும் போராட்ட குழுவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகியது. இதனால் அதிரடிபடை போலீசார் திடீரென மறியல் செய்தவர்களை தாக்க தொடங்கியதால் அனைவரும் சிதறி ஓடினர்.
அப்போது புனலூர் - தென்காசி ரயில் வந்தது. அதனை மறிக்க அனைவரும் ஓடவே கம்யூனிஸ்ட் நகர செயலாளர் நடராஜனை போலீசார் திடீரென தாக்கினர். இதில் அவர் நிலைகுலைந்து தண்டவாளத்தில் விழுந்தார். போலீசார் நடத்திய தடியடியில் 3 பேர் காயம் அடைந்தனர்.
தென்காசி புறப்பட்டு சென்ற புனலூர் ரயிலை நோக்கி பொதுமக்கள் ஓடவே, விபரீதமாகி விடப் போகிறதே என்று பயந்து போன ரயில் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினர்.
ஓடும் ரயிலை நோக்கி நூற்றுக்கணக்கானோர் ஓடி ரயிலை மறித்ததால் அந்த இடமே பெரும் பரபரப்பாக காட்சி அளித்தது. தண்டவாளம் முழுவதும் மனிதத் தலைகளாக காணப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட 152 ஆண்களும் 9 பெண்களும் ஆக 161 பேர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டத்தையொட்டி நெல்லை மாவட்ட எஸ்.பி ஸ்ரீதர் தலைமையில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அமைதியாக போராட வந்த மக்கள் மீது திடீரென போலீஸார் தாறுமாறாக தடியடி நடத்தியதால்தான் அங்கு பெரும் அமளி ஏற்பட்டு விட்டதாக போராட்டக் குழுத் தலைவர் வெங்கடேசன் தெரிவித்தார்.
ரயில் ஓடும் தேதியை அறிவிக்காவிட்டால் போராட்டம் தொடரும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய செங்கோட்டை ரயில் பாதை, திருவனந்தபுரம் ரயில் கோட்டத்தின் கீழ் வருவது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்
















Click it and Unblock the Notifications