பாட்ஷாவை விடுவிக்க கோரிbr/ரயில் நிலையங்களுக்கு குண்டு மிரட்டல்
திருநெல்வேலி:
அல் உம்மா தலைவர் பாட்ஷாவை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் நெல்லை ரயில் நிலையம் குண்டு வைத்துத் த
கர்க்கப்படும் என வந்த மிரட்டலால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திண்டிவனம் ரயில் நிலைய அதிகாரி ஸ்ரீதருக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் கோவை குண்டுவெடிப்பில் மதானியை சிறையில் அடைத்ததற்கு ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும். மேலும் சிறையிலிருக்கும் பாட்ஷாவை விடுதலை செய்ய வேண்டும்.
இல்லாவிட்டால் திண்டிவனம், வேலூர், விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களிலும், வேலூர், கோவை சிறைசாலை அருகேயும் குண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதை தொடர்ந்து பல்வேறு ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை ரயில் நிலையத்திலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அனில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், வெங்கடாசலம் மற்றும் போலீசார் சார்லஸ், மேகநாதன் ஆகியோர் சோதனை செய்தனர்.
தொடர்ந்து நெல்லையிலிருந்து சென்னைக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.












Click it and Unblock the Notifications